அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, October 8, 2009

மைக்ரோவேவ் கேரட் கேக்


தேவையான பொருட்கள்

கேரட் துருவியது 2 கப்
ரவா 1 கப்
மைதா 1 கப்
மில்க் மெய்ட் ¼ கப்
ஜீனீ தேவையான அளவு
சாக்லேட் 1
முட்டை 2
பசுநெய் 5 ஸ்பூன்
வெண்ணை 3 ஸ்பூன்
உப்பு சிறு பிஞ்ச்
முந்திரி, பாதாம் அலங்கரிக்க

முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும்
அடுத்து மைதா, ரவா இரண்டையும் லேசாக வறுத்துகொண்டு, உப்பு, மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கவும்
அதில் வெண்ணை, நெய், ஜீனீ சேர்த்து அடிக்கவும் துருவிய கேரட்டை ¼ ஸ்பூன் நெய்விட்டு கலந்து, ஓவனில் 1 நிமிடம் வைத்து இந்த கலவைகளுடன் சேர்த்து கலக்கவும்
பின் மீதம் உள்ள நெய்யை கேக் ட்ரேயில்விட்டு ஓவனில்30 நொடிவைத்து சூடாக்கிகொள்ளவும் அதனை கலவையுடன் நன்கு சேரும்படி கலக்கவும் பின் இந்த கலவையை அதில் ஊற்றவும் முக்கால் பகுதி வரைமட்டும் ஊற்றவும் மீதமிருக்கும் கேரட்டை அதன்மேல் தூவவும் 10 நிமிடம் டைம் பிக்ஸ்செய்து ஓவனில் வைக்கவும்
5 நிமிடம் கழித்து திறந்து அதன்மேல் வறுத்தோ, வறுக்காமலோமுந்திரி அல்லது பாதாமை அலங்கரித்து, மீண்டும் ஓவனை ஆன் செய்யவும்

ரெடியானதும் வெளியில் எடுத்து அதன்மேல் சாக்லேட் துருவிபோடவும்.

சூட்டிலேயே மெல்ட்டாகிவிடும்

இப்போது சூப்பர் கேரட் கேக் ரெடி.
இதுமிகவும் சுவையானதாக இருக்கும்


குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

அன்புடன் மலிக்கா

8 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை மிக அருமை

Jaleela Kamal said...

வாவ் சூப்பர் கேரட் கேக்

Anonymous said...

சூப்பர் கேரட் கேக்

அன்புடன் மலிக்கா said...

//அருமை மிக அருமை//

மிக்க நன்றி உலவு.காம்

அன்புடன் மலிக்கா said...

//வாவ் சூப்பர் கேரட் கேக்//

சமையல் ராணியே வாவ் சொல்லிட்டாங்கப்பா அதுபோதும், சந்தோஷம் ஜலீலாக்கா

அன்புடன் மலிக்கா said...

//சூப்பர் கேரட் கேக்//

அம்மு சூப்பருக்கு, சூப்பர் தேங்ஸ்

Vijiskitchencreations said...

நொடியில் கேக் ரெடியாயிடுச்சு கலக்கிட்டிங்க. வந்தா கிடைக்குமா? எனக்கு ரொம்ப பிடித்த கேக்.நான் வேறமாதிரி செய்வேன், அடுத்த தடவை இந்த முறையில் தான்.சுப்பர் ரெசிப்பி.

Unknown said...

சூப்பர் கேக்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.