அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, October 19, 2009

ஜால்ரா கோழியப்பம்




தேவையான பொருட்கள்



மைதா 1/4
தேங்காய்ப்பால் 1 கப்[தேங்காய்பால்பெளடர்]
முட்டை 1
உப்பு
கீ [பசுநெய்]
புடிக்குவளைபோன்று சிறிய வால்லுள்ள கப் சுட்டெடுக்க


மிக்சியியில் மைதா உப்பு முட்டை [தண்ணீர் கொஞ்சமாக ] ஊற்றி அரைக்கவும் கட்டிகளில்லாமல்




ரோஸ்ட்டுக்கு உள்ள மாவுபதத்துக்கு [இதேபோல்


முடிந்தால்வடிக்கட்டிக்கொள்ளவும்

அதனை வால்கப்பில்ஊற்றவும்

தோசைக்கல்சூடானதும்

நான்ஸ்டிக் தோசைக்கல்லில் இதுபோன்று சுற்றிச்சுற்றி டிசைன்
போடவும்


அதன்மேல் பசுநெயை தடவியதுபோல் போடவும்

[ஊரில் இருந்தால்வெற்றிலையில் நெய்போட்டு தடவுவோம்

உடனே வெந்துவிடும் திருப்பிப்போடக்கூடாது


10 ,15 நிமிடத்தில் சூப்பரான ஜால்ரா

இதை மட்டன்,, சிக்கன் கறியுடனும் சாப்பிடலாம். மிகுந்த டேஸ்ட்டான

ரெசிபி. எத்தனை சாப்பிட்டாலும் பசியடங்காது..

அன்புடன் மலிக்கா

25 comments:

நாஸியா said...

இது தான் ஜால்ரா கொழியாப்பமா? என் தோழி ஒரு தடவ சொன்னா.. இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் செஞ்சு பாக்குறேன்..

இது எந்த ஊரு ஸ்பெஷல்? தஞ்சாவூர் பக்கமா?

நாஸியா said...

வால் குவளை எங்க கிடைக்கும்? துபாய் ல கிடைக்குதா?

அன்புடன் மலிக்கா said...

ஆமாம் நாஸியா இது தஞ்சை பக்கத்தின் ஸ்பெசல்தான், செய்து பாருங்கள் ரொம்ப ஈசி, சாப்பிட சுவையாகவும் இருக்கும்,

அன்புடன் மலிக்கா said...

வால்குவளை துபையிலும் இருக்கும்

ஆனால் நான் இது ஊரிலிருந்து கொண்டுவந்ததுதான்,நம்ம ஊர்பக்கம் இது கிடைக்கும்,

அதுசரி நாஸியாவுக்கு எந்த ஊர் தெரிந்துகொள்ளலாமா?

மரியம் said...

இதுக்கு பேர் ஜால்ரா இல்லங்க ஜாலர்னு எங்க ஊர்ல சொல்லுவோம் இதுக்கு தொட்டுக்க வட்லப்பம் தான் சூப்பரா இருக்கும்... ஜாலர் முர்தபா செய்ய தெரியுமா ... இதில் சோம்பு தூள்,மஞ்சள் தூள் போட்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

நாஸியா said...

நாம நெல்லை சீமை! :)

சகோதரி மர்யம் (எனக்கு ரொம்ப பிடித்த பெயர், குரானில் தாயார் மர்யம் ரலியல்லாஹு அன்ஹா பெயரில் அத்தியாயமே உள்ளதல்லவா) முர்தபா என்றால் என்ன? உங்க தஞ்சை ஸ்பெஷல் itemellaam போடுங்க

அன்புடன் மலிக்கா said...

எங்க ஊர்பக்கம் ஜால்ரான்னுதான் சொல்லிக்கேள்வி, மர்யம் நீங்க சொல்வதுபோல் வட்டிலப்பமும்தான் இதன் காம்பினேஷன்,

நாங்களும் ஜால்ரா முர்தபா போடுவோம்,விரைவில் அதுவும் குறிப்பாக போடுகிறேன் கருத்துக்களுக்குமிக்க நன்றி அடிக்கடி வாங்க,நன்றி

Jaleela Kamal said...

ஹை மலிக்கா இவ்வளவு பெரிய ஜாங்கிரியா??

ரொம்ப சூப்பர் உங்கள் ஜாலராப்பம்

ராஜவம்சம் said...

இது கூத்தாநல்லூர் ஸ்பெசல் இதே போல் நிறையா இருக்கு (தம்ரோட்,நானகத்தான்,இஜ்ஜி கொத்து )
எனக்கு திங்கதான் தெரியும் செய்யதெரியாது

மரியம் said...

எனக்கு blog லாம் இல்ல நாஸியா...// மலிக்கா நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க நான் இப்ப அபுதாபில இருக்கேன்

அன்புடன் மலிக்கா said...

//ஹை மலிக்கா இவ்வளவு பெரிய ஜாங்கிரியா??

ரொம்ப சூப்பர் உங்கள் ஜாலராப்பம்//

ஹைய்யோடா நம்ம ஜலீலாக்காக்காக சுட்டதுதாங்கோ இந்த ஜாங்கிரி ஹி ஹி ஹி

எப்படி அசத்திட்டோமுள்ள பதில்போட்டு

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...நல்ல குறிப்பு.

அன்புடன் மலிக்கா said...

மர்யம் நான் சார்ஜாவில் இருக்கேன் நீங்க எந்த ஊர்,

Yousufa said...

அன்பு மலிக்கா,

நான் பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் உங்கள் பதிவுகள் தவறாமல் படித்து வருகிறேன். மிகுந்த திறமைகள் உண்டு உங்களிடம், மாஷா அல்லாஹ்!!

ஜாலரப்பம் நாகர்கோவில் கோட்டாரில் பிரபலமான உணவு. ஒன்றிரண்டு முறை செய்திருக்கிறேன். இதே போல் கோதுமை மாவு (சலித்துவிட்டு) உபயோகிட்துச் செய்வதுண்டு.

வால்பையன் said...

இப்ப தான் முதன் முதலா கேள்விப்படுறேன்!

அன்புடன் மலிக்கா said...

//இது கூத்தாநல்லூர் ஸ்பெசல் இதே போல் நிறையா இருக்கு (தம்ரோட்,நானகத்தான்,இஜ்ஜி கொத்து )
எனக்கு திங்கதான் தெரியும் செய்யதெரியாது//

ராஜவம்சம், நீங்க கூத்தாநல்லூரா?
சமைக்க தெரியாட்டியென்ன ருசிக்கத்தெரிந்தால் போதும், சமையல் தானாக வரும்.

(தம்ரோட்,நானகத்தான்,இஜ்ஜி கொத்து/ இது எங்கபக்கமும் செய்வும் ஆனா எந்த ஊர் ஸ்பெசல்னு தெரியாது.

அன்புடன் மலிக்கா said...

//நான் பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் உங்கள் பதிவுகள் தவறாமல் படித்து வருகிறேன். மிகுந்த திறமைகள் உண்டு உங்களிடம், மாஷா அல்லாஹ்//

மிகுந்த சந்தோஷம் ஹுசைனம்மா,
அப்பப்பவந்து பின்னூட்டம்போட்டாத்தானே எங்களை ஆர்வபடுத்துவதுபோல் இன்னும் நிறையச்செய்வோம்,

//ஜாலரப்பம் நாகர்கோவில் கோட்டாரில் பிரபலமான உணவு. ஒன்றிரண்டு முறை செய்திருக்கிறேன். இதே போல் கோதுமை மாவு (சலித்துவிட்டு) உபயோகிட்துச் செய்வதுண்டு//

நானும் கோதுமையிதான் அடிக்கடி செய்வேன் மைதாவைவிட கோதுமை உடம்புக்கு நல்லதுன்னு சொல்லுங்க்கள்ள, நன்றிமா

அன்புடன் மலிக்கா said...

//சூப்பர்ப்...நல்ல குறிப்பு//

ஹாய் கீத்து எப்படியிருக்கீங்க
மிக்க நன்றிபா

அன்புடன் மலிக்கா said...

//இப்ப தான் முதன் முதலா கேள்விப்படுறேன்//


வாங்க வாலு வாங்க இப்பத்தான் முதொமொறையா வாரீக, உங்க வரவு
நல்வரவாகட்டும்,

இத இப்பத்தான் முதன் முதலா கேள்வியா? செய்து சாப்பிடுப்பாருங்க சூப்பராக இருக்கும் ரொம்ப ஈசிதான், இல்லைன்னா அம்மாகிட்ட செய்துதரச்சொல்லுங்க,

நன்றிமீண்டும் வருக தாங்களின் கருத்துக்களை தருக

Yousufa said...

மலிக்கா,

இந்தப் பதிவு பாத்தவுடனே சாப்பிடணும் ஆசை வந்து நேத்து ராத்திரி செய்துட்டேன். குழந்தைகளுக்குப் பிடிக்கும். நான் கொஞ்ச நேரம் அடுப்பில் போட்டு முறு முறுவெனக் கொடுப்பேன்.

என்னிடம் 5 துளைகள் உள்ள கப் தான் இருக்கு.அதில் இவ்வளவு அழகாக டிசன் வருவதில்லை; இல்லை எனக்கு கை வரவில்லையோ என்னவோ?

துபாய் தமிழ்மன்றம் நடத்தும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்கு வருவீர்களா? நானும் வரலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

இதுவரை 5 துளையுள்ள கப்பில் நான்சுட்டதில்லை,

இல்லை ஹுசைன்னம்மா வர சான்ஸ் இல்லை,

சுட்டதில் எனக்கும் தந்திருக்கலாமுள்ள
தெரிந்திருந்தால் வந்திருப்பேன்.

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா ரொம்ப நல்லா இருக்குபா , நானும் செய்தி பார்க்கணும் ஊருக்கு போகும் போது இந்த குவளை வாங்கனும்.

ஸாதிகா said...

மலிக்கா,ஜாலர் அப்பத்தை ஒரு சித்திரம் போல் செய்து இருக்கின்றீர்கள்.எனக்கு மிகவும் பிடித்த டிஷ்.வாழ்த்துக்கள் மலிக்கா

தாஜ் said...

மலிக்கா ஜாலரை இப்படி ஜால்ரா ஆக்கிட்டேயப்பா இது நியாயமா?

ஜெய்லானி said...

கவிதையர் திலகத்தின் கையினால் சூப்பர் டிஸைன்.
((வைர விருது குடுத்தாச்சு . வேற ஏதாவது யோசிக்கனும்))

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.