அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, October 21, 2009

கொடுவாமீன் பொறியல்


                                                           
தேவையானவைகள்

 கொடுவாமீன் பீஸ் 4                                                      
சோளமாவு 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
முட்டை 1
லெமஜூஸ் கொஞ்சம்
கெச்சப் 1 ஸ்பூன்
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப
டெக்கரேஷனுக்கு பல்லாரி ப,மளகாய்


                              மீனை நன்றாக கழுவவும் ஒருபிளேட்டில்

                         சோளமாவு மிளகாய்தூள் லெமன் ஜூஸ் கெச்சப்
                       முட்டையின் வெள்ளைக்கரு உப்பு போட்டு நன்றாக கலக்கி



                                        அதில் மீனை 10 நிமிடம் ஊறவைக்கவும்


                         நான்ஸ்டிக்பேனில் ஆயில் 3 ஸ்பூன் விட்டு சூடானதும் அதில்


மீனைப்போடவும்



                                                வெந்ததும் திருப்பிபோட்டுவிட்டு


கொஞ்சநேரம்வைத்து எடுக்கவும்



                                 முட்டையின்மஞ்சள்கருவுடன்   சிறிது உப்பு                                                                                                                  மிளகுதூள்  போட்டுநன்றாக கலக்கி
                                                      

அதே நான்ஸ்டிக் பேனிலேயே  ஊற்றவும்



                                                            அதுரெடியானதும்



                               ஒரு பிளேட்டில் இந்தமுட்டையை வைத்து
                            அதன்மேல் இந்தமீன்களை வைத்து


வட்டமாக நறுக்கிய பல்லாரியை நீளவாக்கில் நறுக்கிய ப,மிளகாயை சுற்றிலும் வைத்து  அலங்கரித்துப்பறிமாரவும்
                                                 


இந்தமீன்[ஃபிரை] பொறியல்  நல்ல ருசியாக இருக்கும்

அன்புடன் மலிக்கா

10 comments:

ராஜவம்சம் said...

http://nizamroja01.blogspot.com
ரொம்ப பசியோட வேலையிலிருந்து வந்தேன் ரூம்ல கொபுசும் பருப்பும் தான் இருந்தது பசி ருசி அறியாது என்பார்கள் அந்தபருப்புகே இரண்டு கொபுசு சாப்டேன்

(ஹலோ கண்னு வச்சிடாதிங்க)

அதுக்கு அப்பரம் தான் இந்த பதிவை பார்த்தேன்



ஹலோ இன்னும் என்னா சொல்லனும்

Menaga Sathia said...

உங்க மீன் வறுவல் செய்முறைப் பார்த்து சாப்பிட ஆசை வந்துடுச்சு.நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி,நமக்கும் அனுப்பி வைங்க...சூப்பராயிருக்கு மலிக்கா...

பாவா ஷரீப் said...

இப்பவே கண்ணை கட்டுதே!!

அம்மாகிட்ட செய்ய சொல்லி சாப்புடணும் போல இருக்கே

ஆமாம் மலிக்கா மச்சான் குடுத்துவச்சவரு

Anonymous said...

ஆ! வாய் ஊறிங்!

பித்தனின் வாக்கு said...

நான் சாப்பிடுவது இல்லை. ஆனாலும் உங்க செய்முறை படங்களுடன் அருமை. நன்றி.

முகவை மைந்தன் said...

புது செய்முறை. நன்றி. இப்படி பண்ணா அது பேரு வறுவல். பொறியல்ன்றது எண்ணையில் மிதக்க விட்டு எடுக்கிறது ;-)

அன்புடன் மலிக்கா said...

//ராஜவம்சம் said...
http://nizamroja01.blogspot.com
ரொம்ப பசியோட வேலையிலிருந்து வந்தேன் ரூம்ல கொபுசும் பருப்பும் தான் இருந்தது பசி ருசி அறியாது என்பார்கள் அந்தபருப்புகே இரண்டு கொபுசு சாப்டேன்
(ஹலோ கண்னு வச்சிடாதிங்க)

அதுக்கு அப்பரம் தான் இந்த பதிவை பார்த்தேன்
ஹலோ இன்னும் என்னா சொல்லனும்//

ஹலோ கேட்டுது, இதுக்குமேலே சொல்லவே வேணாம் புரிஞ்சிபோச்சி,
ரொம்ப சந்தோஷமுங்க,

இதுபோல்செய்து அதன்கூட தக்காளி பல்லாரி ப,மிளகய், கொஞ்சம் இஞ்சிபூண்டுவிழுது, சீரம்சோம்புப்பொடி ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் ஒருஸ்பூன், உப்பு, போட்டு 2 ஸ்பூன்எண்ணை ஊற்றி, சூடானதும் அனைத்தும்போட்டு வதக்கி வாசனைவரும் நேரத்தில் இம்மீனை மேலே அடுக்கி மூடிவைத்து அடுப்பை சிம்மில் வைத்தால் போதும் 5 நிமிடம் கழித்து திறந்து கொ, மல்லி தூவிவிட்டு ஒரு பிளேட்டில் எடுத்துக்கொண்டு அதவச்சிக்கிட்ட இன்னும் 4, 5, குபூஸ் சாப்பிடுங்கோ..

அன்புடன் மலிக்கா said...

//Mrs.Menagasathia said...
உங்க மீன் வறுவல் செய்முறைப் பார்த்து சாப்பிட ஆசை வந்துடுச்சு.நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி,நமக்கும் அனுப்பி வைங்க...சூப்பராயிருக்கு மலிக்கா//

நம்ம மேனகாதான் காரணமா அதான் சாப்பிட்டபின் வயிறு வலித்ததோ,
கிச்சனில் யாருங்கோ நம்ம மேனகாவுக்கு 5 1/4 பீஸ் பிஷ் பிரை பார்சல்,,

வந்திடும் மேனகா வந்ததும் உடனே சாப்பிட்டுங்க அப்புறம் உங்களுக்கு இருக்காது ஓகேவா,

ரொம்ப நன்றி மேனகா

அன்புடன் மலிக்கா said...

//கருவாச்சி said...
இப்பவே கண்ணை கட்டுதே!!

அம்மாகிட்ட செய்ய சொல்லி சாப்புடணும் போல இருக்கே

ஆமாம் மலிக்கா மச்சான் குடுத்துவச்சவரு//

கட்டிடுச்சா,, அம்மாகிட்டசொல்லி உடனே செய்து சாப்பிட்டுவிட்டு கண்ணுக்கு ரிலீஸ் கொடுங்க.

எனக்கு மச்சானும்
மச்சானுக்கு நானும்
ரொம்ப கொடுத்துவச்சவங்க,

ரொம்ப
ரொம்ப சந்தோஷமுங்க கருவாச்சி தாங்களின் கருத்துக்களுக்கு..

Jaleela Kamal said...

ம்ம் அருமையான கொடுவா மீன் பசியா கிளபுதுங்கோய் .

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.