அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, November 9, 2009

மினி பரோட்டா

தேவையானவை
மைதா 1/4 கிலோ
முட்டை 1
உப்பு
                       
                                                      
டெக்கரேஷனுக்கு


                                                குக்கும்பர் [வெள்ளரிக்காய்]

                                                                 கெச்சப்

                                                                  மயோனஸ்

                                                        வெங்காயத்தாள்

                                                                  தக்காளி

                                                            கொத்தமல்லி


                                                             
மைதாமாவுடன் உப்பு, முட்டை தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து                                                             

உருண்டை போட்டு 1 மணிநேரம் கழித்து


புரொட்டா ஷேப் செய்து


அதில் இதேபோல்ஹார்ட் செய்து எடுக்கவும்



நான்ஸ்டிக் தோசைக்கல்லில் சூடுவந்ததும் இதைபோட்டு

இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்







அதை இதுபோல் டெக்கரேஷன் செய்து பரிமாறவும்


                                                        
இது மையோனஸ் , கெச்சப், அல்லது காரச்சட்னியோடு சாப்பிலாம்.
சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோன்று அவர்களுக்கு ஏற்ற டிசைனில் போட்டுக்கொடுக்கலாம்.



எப்படி நாங்களும் பைவ்ஸ்டார் ஹோட்டலில் வேலைப்பார்த்தோம்முன்னு சொல்லிகொள்ளலாம் இனி  [ஹ ஹ ஹ]


 

10 comments:

பூங்குன்றன்.வே said...

நாங்கல்லாம் முப்பது 'மெஹா சைஸ் பரோட்டா'வை ஐஞ்சு நிமிசத்துல காலி பண்றவங்க.இந்த 'மினி பரோட்டா' எத்தனை சாப்பிட?
நல்லா இருக்கு தோழி இந்த டிஸ் !!!

S.A. நவாஸுதீன் said...

குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல ஐடியாதான்

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு பிடித்த பரோட்டா , ரொம்ப நல்லா இருக்கு.

Jaleela Kamal said...

மினி ஹார்ட் சாண்ட்விச் சூப்பரோசூப்பரு,,

கலக்கல் மலிக்கா வாங்க வந்து அவார்டை பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டு அவார்டு ஒகே,

ஓட்டு போட முடியல.

பாவா ஷரீப் said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

புரோட்டாவுக்கு இவ்ளோ வேலையா....அம்மாடி....அப்டியே பேச்சிலர் சமைக்க ஏதாவது இருந்தா சொல்லுங்க...க்வான்டிட்டி, க்வாலிட்டி ரெண்டுமே நல்லாயிருக்கனும்....பட் வேலையும் கம்மியா இருக்கணும்.

பாவா ஷரீப் said...

மலிக்கா நெஜமா சாப்புடனும் போல இருக்கு.
நீங்க விஜய் டிவி -சமையல் சமையல்ல- கலந்துகிட்டா மாடுலர் கிச்சன் உங்களுக்குதான்

suvaiyaana suvai said...

looks very beautiful!!

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

பாத்திமா ஜொஹ்ரா said...

very nice parotta.I am loving it.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.