மரவல்லிக்கிழங்கு 1/2 கிலோ
முட்டை 2
தேங்காய் 1 கப்
இடியப்பமாவு 1 கப்
ஜீனீ தங்களின் விருப்பத்திற்கேற்ப
உப்பு சிறிது
நெய் சுட்டெடுக்க
முதலில் ம.கிழங்கை சிறிதாக நருக்கி மிக்சியில் இடவும்
அதனுடன் முட்டை ஜீனீ உப்பு சேர்த்துகொள்ளவும்
கொரகொரப்பாக அரைத்துகவும்
கொஞ்சம் கெட்டியாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
பின்பு ஒருநான்ஸ்டிக் ஃபிரேபேனில் 1 ஸ்பூன் நெய்விட்டு
கட்டை தோசைப்போல் ஊற்றவும்
[அடுப்பை சிம்மில் வைத்து] மூடிவைக்கவும்
பின் திறந்து திருப்பிபோட்டு 2 பகுதியும் நன்றாக வேக விட்டுஎடுக்கவும்
இது மாலைநேர டிபனுக்கு நல்லது
குழந்தைகள் விரும்பிசாப்பிடுவார்கள்
இதையே காலை டிபனுக்கு செய்யம் போது ஜீனீயை தவித்து
வெங்காயம் ப,மிளாகாய் நைசாக அரிந்துபோட்டு ஆயில்விட்டு
தோசைபோல் வார்த்தெடுக்கலாம்..
அன்புடன் மலிக்கா
18 comments:
மலிக்கா எனக்கு ரொம்ப பிடித்தது, நான் அரிசி ஊறவைத்து செய்வேன் , முட்டை சேர்க்கமாட்டேன், சீனிக்கு பதில் வெல்லம் . சென்றவாரம் கூட ஒரு நாள் செய்தேன்.
கிழங்கடை ரொம்ப சூப்பரா இருக்கும்.
மரவள்ளி கிழங்கு அடை ரொம்ப சூப்பர், நான் இதுவரை செய்ததில்லை செய்து பார்க்கிறேன் மலிக்கா
ஐ! இது நல்லா இருக்கே.. எங்க ஆச்சா (வாப்பாவின் ம்மா) கிழங்க அவிச்சு சீனி, தேங்காய் துருவி போட்டு தருவாங்க
மரவள்ளிக்கிழங்கு தோசையா? புதுசாத்தான் இருக்கு!!
இந்த மரவள்ளிக்கிழங்குதான் கேரளத்தில் “கப்பங்கிழங்கு” என்று அழைக்கப்படுகிறதா மலிக்கா?
நானும் இதில் முட்டை சேர்க்க மாட்டேன்.உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்.நன்றாக இருக்கு மலிக்கா!!
வாழைபழம், வெல்லம் போட்டு அம்மா செய்வாங்க
நல்லா இருக்கு மலிக்கா
நாங்கள் அரிசிமாவுக்கு பதிலாக மைதா ச்சேர்த்து செய்வோம்.சுவையான அடை.
ஹுசைனம்மா,
//இந்த மரவள்ளிக்கிழங்குதான் கேரளத்தில் “கப்பங்கிழங்கு” என்று அழைக்கப்படுகிறதா மலிக்கா//
ஒரு பாட்டு இருக்கு பாருங்கள்'வாடி என் கப்பக்கிழங்கே'சிறு வயதில் கேட்ட பாடல்.கப்பக்கிழங்கு என்றால் என்ன என்று தெரியாது.கேட்டவர்களிடம் 'தெரியாது என்ற பதில் தான் வரும்.இப்பொழுதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
/sarusriraj said...
மலிக்கா எனக்கு ரொம்ப பிடித்தது, நான் அரிசி ஊறவைத்து செய்வேன் , முட்டை சேர்க்கமாட்டேன், சீனிக்கு பதில் வெல்லம் . சென்றவாரம் கூட ஒரு நாள் செய்தேன்./
அப்படியாக்கா அப்படியே இங்கும் பார்சல் அனுப்பக்கூடாது இப்படி தானே சாப்பிடலாமா?
S.A. நவாஸுதீன் said...
கிழங்கடை ரொம்ப சூப்பரா இருக்கும்.
ஆமாண்ணா. எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா செய்தால்..
Jaleela said...
மரவள்ளி கிழங்கு அடை ரொம்ப சூப்பர், நான் இதுவரை செய்ததில்லை செய்து பார்க்கிறேன் மலிக்கா..
செய்துபாருங்கக்கா, அப்புறம் விடவே மாட்டிங்க டேஸ் சூப்பராக இருக்கும்..
/ஹுஸைனம்மா said...
மரவள்ளிக்கிழங்கு தோசையா? புதுசாத்தான் இருக்கு!!/
ஹுசைன்னம்மா. தோசை அடைன்னு சுட்டுபாருங்க. வகை வகையாதுன்னோனுமுல்ல..
இந்த மரவள்ளிக்கிழங்குதான் கேரளத்தில் “கப்பங்கிழங்கு” என்று அழைக்கப்படுகிறதா மலிக்கா?
ஆமாம் ஹுசைன்னம்மா. இதில் நிறைய வெரைட்டி செய்வாங்க..
நாஸியா said...
ஐ! இது நல்லா இருக்கே.. எங்க ஆச்சா (வாப்பாவின் ம்மா) கிழங்க அவிச்சு சீனி, தேங்காய் துருவி போட்டு தருவாங்க/
அப்படியும் திம்போம்முல்ல..நாங்க:}
/Mrs.Menagasathia said...
நானும் இதில் முட்டை சேர்க்க மாட்டேன்.உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன்.நன்றாக இருக்கு மலிக்கா!!/
செய்துபாருங்க மேனகா. சுவையும் மணமும் ம்ம்ம் சும்மா ஜோரா இருக்கும்..
ஸாதிகா said...
நாங்கள் அரிசிமாவுக்கு பதிலாக மைதா ச்சேர்த்து செய்வோம்.சுவையான அடை./
மைதாவா? அப்படி இதுவரை செய்ததில்லை ஏன்னா கிழங்கிழும் சற்று இழுவையிருக்கும் மைதாவிலும் இழுவையிருக்கும் சரியா வருமா? ஸாதிக்காக்கா..
ஹுசைனம்மா,
//இந்த மரவள்ளிக்கிழங்குதான் கேரளத்தில் “கப்பங்கிழங்கு” என்று அழைக்கப்படுகிறதா மலிக்கா//
ஒரு பாட்டு இருக்கு பாருங்கள்'வாடி என் கப்பக்கிழங்கே'சிறு வயதில் கேட்ட பாடல்.கப்பக்கிழங்கு என்றால் என்ன என்று தெரியாது.கேட்டவர்களிடம் 'தெரியாது என்ற பதில் தான் வரும்.இப்பொழுதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
அச்சோ.பாட்டெல்லாம் பாடுறீங்க ..கேட்க இனிமையா இருக்குங்கோ.. அதே கப்பகிழங்குதான்..
/கருவாச்சி said...
வாழைபழம், வெல்லம் போட்டு அம்மா செய்வாங்க
நல்லா இருக்கு மலிக்கா/
அம்மா எப்படிசெய்துதந்தாலும் அமிர்தமே. இல்லகருவாச்சண்ணே?
salam malikkaa என்னை நினைவிருக்கா இந்த வலைபதிவு இப்பதான் பார்க்கிறேன் சூப்பருங்கோ
சமையல் ராணீயே அசத்துங்கோப்பா
சலாம் மலிக்கா எப்படிம்மா இப்படியெல்லாம் அசத்துறே
எல்லொரும் நல்ல சுகம்ப்பா
கிழங்கு அடை சுட்டு மறைந்து [மறந்து] கொண்டு வரும் நம் சாப்பாட்டை நினைவுக்கு கொண்டு வரும் மலிக்கு ஒரு சபாஷ்
நல்ல ரெசிப்பி மல்லிக்கா. எனக்கு இது ரொம்ப பிடித்திருக்கு. நான் அடுத்த முறை இந்த மினி பரோட்டா செய்து அசத்தலாமே. நைஸ்.
Post a Comment