/தேவையானவை/
இடியப்பமாவு 2 கப்
கோதுமை மாவு 2 கப்
உப்பு
ஆயில்
சிறிதளவு சோடாப்பு அல்லது ஜீனீ
இரு மாவையும் கலந்து அதில் உப்பு சோடாப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
பின்பு உருண்டைகள் போட்டு அதை இதேபோல்
சப்பாத்திகட்டையால், அல்லது பிரஸிங் மூலம் நிறைய செய்துகொள்ளவும்
கடாயில் ஆயில் விட்டு சூடானதும்
இதுபோல் இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்
சுவைமிகுந்த பூரி ரெடி!
குழந்தைகள் சிறிய பூரியில் உள்ளுக்குள் கிழங்குவைத்து சாப்பிட விரும்புவார்கள் அவர்களுக்கு இதேபோல் செய்து கொடுக்கலாம்
இதற்கு உருலைகிழங்கிலும் சைடிஸ் செய்யலாம். பூசணிக்காவிலும் செய்யலாம்..
அன்புடன் மலிக்கா
14 comments:
தோழி...நீங்களும் விதவிதமா சமைச்சிட்டு வரீங்க.என்றைக்கு விருந்து சாப்பிடுவது?
v.good... try panren..!
வித்யாசமான டிபன் . செய்து பார்கிறேன்.
இதில் சோடா உப்பு போடாமல் செய்தால் வராதா?
அரிசி மாவு சேர்த்து பூரி செய்வதை முதல் முறை பார்க்கிறேன். ;-))
/பூங்குன்றன்.வே said...
தோழி...நீங்களும் விதவிதமா சமைச்சிட்டு வரீங்க.என்றைக்கு விருந்து சாப்பிடுவது?/
எப்பவேண்டுமென்றாலும் விருந்து சாப்பிடவரலாம் தோழமையே.
/கலகலப்ரியா said...
v.good... try panren../
வாங்க கலகலப்பிரியா. முதல்முறையா வந்திருக்கீங்க,
தொடர்ந்துவாருங்கள் தோழியே...
/MALARVIZHI said...
வித்யாசமான டிபன் . செய்து பார்கிறேன்./
வாங்க மலர்விழி எனக்கு தமிழ் பெயர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் மலரும் விழியும் அழகு..
தொடர்ந்துவாருங்கள் தோழியே...
/ஹுஸைனம்மா said...
இதில் சோடா உப்பு போடாமல் செய்தால் வராதா?
அரிசி மாவு சேர்த்து பூரி செய்வதை முதல் முறை பார்க்கிறேன். ;-))/
சோடாப்பு சிறிதளவு போட்டால் சற்று உப்பியதுபோல் சூப்பராக வரும் தவிர்த்துவிட்டு வேண்டுமென்றால் ஜீனி சேர்த்து பிசையாலாம்..
நல்ல டேஸ்டாக இருக்கும் ஹுசைன்னம்மா
http://shadiqah.blogspot.com/2009/11/blog-post_27.html
இந்த லின்க்கை பார்க்கவும்
wow,wonderful
பூரியில் கூட இவ்வளவு வெரைட்டி இருக்கா. அதுசரி
மலிக்கா பூரி எனக்கு மிகவும் பிடிக்கும்,அரிசி மாவு கலந்து இது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் செய்து பார்கிறேன்.
மலிக்கா பூரி எனக்கு மிகவும் பிடிக்கும்,அரிசி மாவு கலந்து இது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் செய்து பார்கிறேன்.
என்ன இன்னைக்கு டிஃபன் செய்ய என்றால் பிள்ளைகள் வாயில் முதலில் வருவது பூரி என்ற சொல்தான்
ஆனா அரிசி மாவு போட்டு செய்ததில்லை இனி செய்து பார்க்கனும்ப்பா நான் ரவை போடுவேன்ப்பா
Post a Comment