அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, January 25, 2010

குடியரசு தின வாழ்த்துக்கள்


அடக்குமுறைசெய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை
சூடிய தினம்

உப்புசத்தியாகிரங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்

தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்க்காக
அர்ப்பணம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம்

தன்
வம்சா வழியினர்கள்
வசந்தமாய் வாழ
தன்
வாழ்நாட்க்களை
வலியுடன் கழித்தவர்களை
வருத்தமுடன்
நினைக்கும் தினம்

சுதந்திரக்காற்றை
நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம்
தூக்கியெறிந்த
தியாகிகளின்
தியாக தினம்

 நம்தாய்நாட்டினை
அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாட்டுபட்டவர்களை
இன்றுமட்டும்
நினைப்பதில்
நியாயமில்லை

எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தந்தர்களோ
அதைகண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது
நம்கடமை

சுதந்திரகாற்றை சுகமாய்
அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி
வாழ்வோமாக

நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போரடியகளையும்
நினையுகூறுவோமாக.

அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
எந்தாய்திருநாட்டில்
வாழும் கோடானகோடி
மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும்

என்அன்பான
குடியரசு தின வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா

9 comments:

S.A. நவாஸுதீன் said...

அழகான கவிதை தந்த சகோதரிக்கும் மற்ற அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

குடுயரசுதின வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

குடியரசு தின வாழ்த்துக்கள்....

அன்புடன் மலிக்கா said...

கருத்துக்கள் தந்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி..

Vijiskitchencreations said...

நல்ல கவிதை மல்லிகா. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்லாருக்கு. வாழ்த்துக்கள்...

பாத்திமா ஜொஹ்ரா said...

வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

குடியரசு தினம் பற்றீ அருமையான கவிதை,கரெக்ட்டா நீங்க கொடியேற்றும் போது வர முடியாம போய் விட்டது

Anonymous said...

நம் முன்னோர்கள் போராடி வாங்கி தந்த சுதந்திரத்தை தொலைத்து விடாமல் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.