அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, January 28, 2010

ஐந்து ஆறுவகை அப்பம்


தேவையானவைகள்

பச்சரிசி 3 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
சோறு தேவைக்கேற்ப
உப்பு

அரிசியைஊறவைத்து தேங்காய் சோறு சேர்த்து அரைக்கவும்[முதல்நாளிரவு]
நன்றாக பொங்கியிருந்தால் அப்பம் மிருதுவாக இருக்கும்
அப்பமாவுடன் உப்புசேர்த்து பதமாய் கலந்து நான்ஸ்டிக்சட்டியில் ஊற்றிமெதுவாகசுற்றி
விட்டு மூடிவைத்து வெந்ததும் எடுக்கவும்
இதுசாத அப்பம்
------------------------------------------------------------------------------
அப்பமாவு 5 கரண்டி 2 முட்டைதண்ணீருக்கு பதிலாக அரைப்பதில்
சேர்ப்பதற்கு கொஞ்சம் மஞ்சள்தூள்
சிறியவெங்காயம்6. பச்சைமிளகாய்2 .சீரகசோம்பு [முழுது].
1டீஸ்பூன் சேர்த்து
கொரகொரப்பாக மிக்சியில் அரைத்து மாவுடன் சேர்த்து உப்புபோட்டு
நன்றாக கலக்கி நான்ஸ்டிக் அப்பச்சட்டியில் ஊற்றி எடுக்கவும்
இது மஞ்ஜசப்பம்
--------------------------------------------------------------------------------
5 கரண்டி மாவில் 3 முட்டை ஜீனீ நெய்தேவைகளுக்கேற்ப சேர்த்து
முட்டை நன்றாக அடித்து கலக்கி மாவுடன்சேர்த்து சட்டியில் ஊற்றி எடுக்கவும்
இது ஜீனீ அப்பம்
--------------------------------------------------------------------------------
5 கரண்டிமாவில் மஞ்சள்தூளும் சீரகசோம்புத்தூluம் கருவேப்பில்லையும்
மாவுடன்சேர்த்து வார்த்தெடுக்கவும்
இது பிலாச்சப்பம்
--------------------------------------------------------------------------------
அப்பமாவை இட்லிமாவுபதத்துக்கு கெட்டியாக கலக்கி உப்புசேர்த்து கலக்கி
இட்லி சட்டியில் ஊற்றிஎடுத்தால்
இது வண்டப்பம்

தேங்காய்க்குபதிலாக உளுந்து சேர்த்தும் அரிசியுடன் அரைக்கலாம்
இது கொலஸ்டால் உள்ளவர்களுக்கு நல்லது

அன்புடன் மலிக்கா

29 comments:

jailani said...

போட்டோவை பார்ததுல ஊர் (வீட்டு) நினைவுதான் வருது.

Mrs.Faizakader said...

ஆப்பம் சூப்பரா இருக்கு. இன்னும் கீமா திக் கிரேவியினை ஆப்ப மாவுடன் மிக்ஸ் செய்து செய்தால் கீமா ஆப்பம் ரெடி சுவையாக இருக்கும்

ஸாதிகா said...

அப்பத்தை அழகாக காட்டி இருக்கிறீர்கள் மலிக்கா.ஆறையும் படம் எடுத்து போட்டு இருக்கலாம்

மகி said...

வகை வகையான ஆப்பமா? நன்றாக இருக்கு மலிக்கா!

sarusriraj said...

ஒரே மாவில் இத்தனை வகை ,வெரி குட் மலிக்கா

malarvizhi said...

sshhhhhhhh appaa!!!!!! ippave kanna katuthe.. ore mavil ithanai appamaaa? very nice.

sabeeca said...

சலாம் ராத்தா நம்ம ஊரு வாசம் தூக்குதே..மஞ்சப்பம் செய்யும் போது ஒரு 4;5 இறால் சேர்த்து அரைத்து அப்பம் சுட்டா இன்னும் வாசமாவும் ருசியாவும் இருக்கும்.. இதே சொல்லுரேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. சாரி யக்கோவ்.... ஊருக்கு போன் போட்டியலா ஊர்ல ஏதோ பிரச்சனையாம்.

sabeeca said...

ஓட்டு போடுங்கோ ஓட்டு போடுங்கோன்னு சொல்லுரிங்களே.எங்கப்போட, எந்த கட்சிக்கு போடனும்னு சொல்லவே இல்லயே..

sabeeca said...

வண்டப்பத்தை, இடியாப்ப தட்டிலும் சுடலாம். இடியாப்ப தட்டில் ஒரு குச்சி வைத்து அதன் மேல் ஒரு இட்லி துனியைப்போட்டு மாவை ஊத்தி சுட்டெடுத்தால் பிறை வடிவத்தில் வண்டப்பம் கிடைக்கும்.. சாரி ராத்தா என்னை தப்பாக என்ன வேண்டாம்

சிங்கக்குட்டி said...

அருமை :-) .

அன்புடன் மலிக்கா said...

/jailani said...
போட்டோவை பார்ததுல ஊர் (வீட்டு) நினைவுதான் வருது./

வந்துரிச்சா சந்தோஷம்

அன்புடன் மலிக்கா said...

/Mrs.Faizakader said...
ஆப்பம் சூப்பரா இருக்கு. இன்னும் கீமா திக் கிரேவியினை ஆப்ப மாவுடன் மிக்ஸ் செய்து செய்தால் கீமா ஆப்பம் ரெடி சுவையாக இருக்கும்/


ஓகோ அப்படியும் செய்யலாமா செய்துபார்கலாமே நன்றி பாயிஜா

அன்புடன் மலிக்கா said...

/ஸாதிகா said...
அப்பத்தை அழகாக காட்டி இருக்கிறீர்கள் மலிக்கா.ஆறையும் படம் எடுத்து போட்டு இருக்கலாம்/

இனி எடுத்து இதில் சேர்த்துவிடுகிறேன்
ஸாதிக்காக்கா மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

மகி said...
வகை வகையான ஆப்பமா? நன்றாக இருக்கு மலிக்கா!/

மல்லிமகி வருக வருக! மிக்க மகிழ்ச்சி

//sarusriraj said...
ஒரே மாவில் இத்தனை வகை ,வெரி குட் மலிக்கா//

சாருக்கா சூப்பர் போட்டோக்கள் பதில் உடனே போடமுடியலைக்கா. நாளை மறுநாள் போடுகிறேன்.

என் செல்லங்கள் அருமை. நிறைய பேசனுக்கா ஞாயிறு யாஹூக்கு வாங்க

அன்புடன் மலிக்கா said...

//malarvizhi said...
sshhhhhhhh appaa!!!!!! ippave kanna katuthe.. ore mavil ithanai appamaaa? very nice.//


வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மலர்விழி

அன்புடன் மலிக்கா said...

/sabeeca said...
சலாம் ராத்தா நம்ம ஊரு வாசம் தூக்குதே..மஞ்சப்பம் செய்யும் போது ஒரு 4;5 இறால் சேர்த்து அரைத்து அப்பம் சுட்டா இன்னும் வாசமாவும் ருசியாவும் இருக்கும்.. இதே சொல்லுரேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. சாரி யக்கோவ்.... ஊருக்கு போன் போட்டியலா ஊர்ல ஏதோ பிரச்சனையாம்/

இதில் தப்பென்ன சபீ நானும் இதுபோல் சேர்த்து அரைப்பேன் சிலசமயம்..

நம்மஊரில் பிரச்சனைதான் அதை மெயிலில் பகிர்ந்துகொள்ளலாமா செல்லம்.

உங்கபோட்டோ பார்த்தேன் பிள்ளைகளும் நீங்களும் சூப்பர். நான் பார்த்த ஞாபகமாகத்தான் தெரியுது என்னைத்தெரியுமா சபீ உங்களுக்கு?

அன்புடன் மலிக்கா said...

/sabeeca said...
ஓட்டு போடுங்கோ ஓட்டு போடுங்கோன்னு சொல்லுரிங்களே.எங்கப்போட, எந்த கட்சிக்கு போடனும்னு சொல்லவே இல்லயே../

தமிழிஸிலும் தமிழ்மணத்திலும் போடனும் கன்னு வேட்பாளர் நான் எனக்குதான் ஓட்டு ஹா ஹா.. அதன்விபரம் மெயிலில் அனுப்புகிறேன்

துபாய் ராஜா said...

அருமையான குறிப்புகள். ஊருக்கு போகும்போது வீட்ல செய்முறை சொல்லி பண்ணிடலாம். :))

suvaiyaana suvai said...

ஆப்பம் சூப்பரா இருக்கு!!

S.A. நவாஸுதீன் said...

ஊருக்கு போறதோட உங்க மச்சிக்கும் இதை காமிச்சு செய்ய சொல்லிடுவோம் தங்கச்சி.

sabeeca said...

சலாம் ராத்தா.ங்கொய்யாலே! காமடி கீமடி பன்னாதீங்க ராத்தா. விருது வாங்ககுள்ளத்தான் நல்லா முகத்த மூடிக்கிட்டீங்கலே. நா எங்கேர்ந்து பாக்குறது.

sabeeca said...

சலாம் ராத்தா.ங்கொய்யாலே! காமடி கீமடி பன்னாதீங்க ராத்தா. விருது வாங்ககுள்ளத்தான் நல்லா முகத்த மூடிக்கிட்டீங்கலே. நா எங்கேர்ந்து பாக்குறது.

sabeeca said...

சலாம் ராத்தா.ங்கொய்யாலே! காமடி கீமடி பன்னாதீங்க ராத்தா. விருது வாங்ககுள்ளத்தான் நல்லா முகத்த மூடிக்கிட்டீங்கலே. நா எங்கேர்ந்து பாக்குறது.

sabeeca said...

சலாம் ராத்தா.ங்கொய்யாலே! காமடி கீமடி பன்னாதீங்க ராத்தா. விருது வாங்ககுள்ளத்தான் நல்லா முகத்த மூடிக்கிட்டீங்கலே. நா எங்கேர்ந்து பாக்குறது.

சே.குமார் said...

பஞ்ச அப்பத்தால் பசி வருது. படிக்கும் போதே அப்பம் சாப்பிட்ட மாதிரி. வாழ்த்துக்கள்.

thaaj said...

சலாம் மலிக்கா

இன்னும் மிச்ச சொச்சம் இருக்கா?

அதயும் போட்டுவிடு கன்னு

ஹுஸைனம்மா said...

மற்ற ஆப்பங்களுக்கு மாவு புளிக்க வேண்டாமா மலிக்கா?

வண்டப்பம் செய்வது படம்பிடித்து போடுங்களேன். இதற்கும் மாவு புளிக்க வேண்டாமா? ஆப்பம் சரியாக வராதப்போ இதைச் செய்து சமாளிக்கலாமா?

Jaleela said...

மலிக்கா எல்லா ஆப்பங்களும் அருமை,.

இனியன் பாலாஜி said...

மிகவும் அருமை மலிக்காஜி
படிப்பதற்கே நன்றாக இருக்கிறது. வீட்டில் சொல்லிப் பார்க்கிறேன்
சாப்பிட்டு பார்த்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு

இனியன் பாலாஜி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.