தேவையானவை
பேபிக்கான் 2 கப்[ இளம் பிஞ்சி சோளம்]
முட்டை 1
ஜவ்வரிசி 1 கப்
மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
மல்லி
பச்சைமிளாய் 2
உப்பு
ஜவ்வரிசியை 3 நிமிடம் ஊறவைத்ததுடன்
குக்கரில் சோளத்தைபோட்டு அதனுடன் 4 கப் தண்ணீர்வைத்து
ஜவ்வரிசியையும் போட்டு உப்பும் சேர்த்து 5. விசில் விடவும்.
குக்கரை திறந்து அதில் முட்டையின் வெள்ளை கருவைமட்டும் சிதறியதுபோல் ஊற்றவும் சற்று கலக்கிவிட்டு பின்பு பச்சைமிளாய் பொடியாய் நறுக்கி
மிளகுத்தூளையும் போடவும் சிறிது கொதிவந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லியை பொடியாக நறுக்கித் தூவவும்.
இது உடலுக்கு மிகவும் சத்தான சூப். குடிக்கும்போதே சோளம் இடையில் கடிபடும்போது செம டேஸ்டியாக இருக்கும்.
ஜவ்வரிசி சேர்ப்பதால் குளுமையும் கூட
இந்த சூப் துபையில் மதினத்துல் ஜுமைராவில்
இண்டர் நேஷனல் ஹோட்டலில் சாப்பிட்டோம். அங்கு அனைத்து நாட்டின் ரெஸ்பிகளும் சும்மா சோக்க இருக்கும். அதில் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் செய்துபார்த்தபோது இந்த சூப்பும் இருந்தது சாப்பிட்டதும் பிள்ளைகளுகு ரொம்ப இஸ்டப்பட்டுவிட்டது
அடிக்கடி செய்துகேட்கிறார்கள்.
[அந்த ஹோட்டலில் நம்ம ஹீரோ]
ரெஸிபி எப்படி செய்வதுன்னு அவங்களிடமா கேட்கமுடியும் சாப்பிட்ட டேஸ்டை வைத்து நாமே செய்வோமுன்னு செய்தா!
அப்படியே அந்த டேஸ்ட். [நெசமாங்கோ நம்புங்கோ]
என்ன அவங்க ஏதோ இருவகை சாஸ் சேர்க்கிறர்கள் அது நமக்கு வேணாமுன்னு பச்சைமிளகாயும் மல்லியும் சேர்த்துக்கொண்டேன்
அவர்கள் பச்சைமிளாய் மற்றும் மல்லி சேர்க்கவில்லை.
நம்ம நாக்கு கேட்க்குமா அதான் கொஞ்சம் நான் சேர்த்துக்கொண்டேன்.
நீங்களும் டெஸ்ட் பண்ணுங்கோ செய்துபார்த்து.
அன்புடன் மலிக்கா
31 comments:
செய்து பார்த்துவிடுவோம்...பார்க்க நன்றாக இருக்கின்றது...நன்றி
பார்க்கவே இப்பவே சமைக்கதூண்டுதே
படம் !!!!!! சூப்பர்!!!!!!!!!!!!!!!!!
ஆமாங்க, காய்ச்சல்காரங்கதான் காரம் இல்லாமெ சாப்பிடோணும், நமக்கு என்னா தலையெழுத்தா? அல்சர் வருமாமே, வந்தா பொறவு பாத்துக்கலாம், என்னங்க?
looks exotic...thanks for sharing this useful tip
/Geetha Achal said...
செய்து பார்த்துவிடுவோம்...பார்க்க நன்றாக இருக்கின்றது...நன்றி/
செய்துபார்த்து சொல்லுங்க கீத்து டேஸ்ட் சூப்பர்.
நன்றிமா..
/Geetha Achal said...
செய்து பார்த்துவிடுவோம்...பார்க்க நன்றாக இருக்கின்றது...நன்றி/
செய்துபார்த்து சொல்லுங்க கீத்து டேஸ்ட் சூப்பர்.
நன்றிமா..
/ஸாதிகா said...
பார்க்கவே இப்பவே சமைக்கதூண்டுதே//
தூண்டுதா! அப்ப உடனே குக்கரை எடுங்க. சூப் செய்து கத்தாரிலிருந்து துபைக்க்கு ஒரு பார்சல் பார்சல் சிலவு என்னோடு ஓகே.
கண்டிஷன் சூடாகவே இருக்கோனும் சூப்..அக்கோவ்..
ஜெய்லானி said...
//குடிக்கும்போதே சோளம் இடையில் கடிபடும்போது செம டேஸ்டியாக இருக்கும்.//
பல் இல்லாத தாத்தாக்களுக்கு எதிராக இப்படி எழுதியதை தாத்தாக்கள் பாட்டிகள் சார்பாக நான் வண்மையாக கண்டிக்கிறேன்..உஸ்...அப்பாடா..ம்..முடியல.....ம்..
நான் வெளியில் சொல்லக்கூடாதேன்னு மரூஃபிற்க்கு அங்கிள்ன்னு சொல்லி வச்சிருக்கேன் எல்லோரிடமும். இப்ப நீங்களே
மாட்டிக்கிட்டீங்களா.
அந்த செட்டுப்பல்லை அடிக்கடி ஜில் தண்ணீரில் போட்டுவைக்க மறக்கதீங்க.
அப்புறம் மச்சி சுட்ட முருக்கை வாயில் ஊறவைத்தே வைத்து சாப்பிடுங்க ஓகே.. எப்புடி இதத்தான் எங்க ஊரிலும் யானைகதை சொல்லுவாங்கோ ஹி ஹி ஹி
/ஜெய்லானி said...
படம் !!!!!! சூப்பர்!!!!!!!!!!!!!!!!!//
எடுத்து யாரு இந்த அழகு தேவதையாச்சே. [அச்சொ பாத்தா பயந்துடாதீங்க]
முட்டையில் உள்ள வெள்ளை பகுதி மட்டும் தானே சேர்க்கவேண்டும்.
ஜெய்லானி said...
//அங்கு அனைத்து நாட்டின் ரெஸ்பிகளும் சும்மா சோக்க இருக்கும். அதில் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் செய்துபார்த்தபோது இந்த சூப்பும் இருந்தது//
தாய்லாந்து ஐட்டத்தில நாலு கால், எட்டு கால் ஜீவராசி எல்லாம் இருக்கும் பாத்துகோங்க!! அப்புறம் அது நூடுல்ஸா இருக்காது//
அதையும்போய் எடுத்துட்டோமுல்ல
[துவாய்ய்ய்ய்ய்] என்ன சத்தமுன்னு பாக்குறீங்களா வாயிலிருந்துதான்.
என்னாமா சாப்பிடுறாங்க அதை பின்னே அது அவங்களோட டிஸாச்சே.
அவங்க நமள்ளப்பாத்து துவாஆஆஆதான்.
ஆனலும் நம்ம நாட்டு ரெஸிப்பிக்கு ஈடாகுமா இல்ல மரூஃப்போடஜெய்லானித்தாத்தா..
//infopediaonlinehere said...
looks exotic...thanks for sharing this useful tip//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
/Dr.P.Kandaswamy said...
ஆமாங்க, காய்ச்சல்காரங்கதான் காரம் இல்லாமெ சாப்பிடோணும், நமக்கு என்னா தலையெழுத்தா? அல்சர் வருமாமே, வந்தா பொறவு பாத்துக்கலாம், என்னங்க?/
அதானே நாமஎன்ன
காய்சல் காரவுகளா ?
அளவுகு அதிகமாகிவிட்டால் அனைத்துமே ஆப்பத்துதான் இல்லையா டாக்டர். அல்சர் வராம பாத்துக்குவோம்.
மிக்க நன்றி டாக்டர்
செஞ்சு பாத்துடுவோம். பாக்க ரொம்பவே நல்லா இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா செய்து பார்த்திவிடுவோம்
மல்லிகா இப்படி அசத்துரிங்கலே. வாயில் நீர் ஊறுத்து.
சாப்டாச்சு.. நல்லா இருக்குங்க..
//நான் வெளியில் சொல்லக்கூடாதேன்னு மரூஃபிற்க்கு அங்கிள்ன்னு சொல்லி வச்சிருக்கேன் எல்லோரிடமும். இப்ப நீங்களே
மாட்டிக்கிட்டீங்களா//
இந்த மாதிரி ஏடாகூடமா பதில் போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் கமெண்ட்ட டெலிட் பண்ணினேன். அதுகுள்ள பச்ச ரோஸாவை பாவம்ப் பாக்காம பிச்சி பீஸ் பீஸா ஆக்கிட்டீங்களே!!
சூப் நல்ல டேஸ்ட்,
நன்றி.
சைனிஸ் சூப் அருமை மலிக்கா
தயிர் பஜ்ஜியும் சூப்பர் கலக்குறீங்க டா
நல்ல சூப்...
ஊருக்குப் போய் சூப் சாப்பிடலாம்.
கண்டிப்பாக உபயோகப் படும்..
நன்றி..
முன்பே பார்த்திருந்தால் இன்றைக்கு செய்து பார்த்திருப்பேன். மகன் வரட்டும். செய்து விட்டு சொல்கிறேன். செய்முறை நல்லா இருக்கு.
உங்களுக்காக விருது ஒண்ணு நம்ம தளத்துல காத்துகிடக்கு அக்கா , நேரமிருக்கும் போது வந்து பெற்றுகொள்ளவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.html
அன்புள்ள மலிக்கா!
உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
சோளம் சூப் சூப்பருங்கோ, செய்து பார்த்து விட்டு சொல்கீறேன்.
அதெப்பிடிங்க சாப்பிட்டுப் பாத்தவுடன் செஞ்சிடறீங்க. பெரிய ஆளுதான் நீங்க.
இன்னும் செஞ்சு பாக்கலை. என் பொண்ணு கிட்ட சொல்லி ட்ரை பண்ணிட்டு மறுபடியும்
பின்னூட்டத்திற்கு வர்றேன்.
போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு... ஹீரோ என்ஜாய் பண்ணி சாப்டிட்டு இருக்காரு போல......
Post a Comment