கோதுமை மாவு 2 கப்
ஈஸ்ட் சின்ன ஸ்பூன் அளவு
உப்பு
தண்ணீர் 1 கப்
ஆயில் பொரித்தெடுக்க
அஷீ Dத் பேரிச்சம்பழச்சாறு
அல்லது தேன்
கோதுமை மாவுடன் தண்ணீர் ஈஸ்ட் உப்பு சேர்த்து நன்றாக அடித்து பிசையவும் சற்று இளகளாக அதௌ அடித்துபிசையும்போதே பொங்கியதுபோல் வரும் 15 நிமிடம் பிசைந்து வைக்கவும்.
கடாயில் ஆயில் சூடானதும் கைகளிலேயே சிறிய வெங்காயம் அளவுக்கு
எடுத்து எடுத்து போடவும் மிதமான தீயில் வைக்கவும் அடுப்பை.
குளோப்ஜாமூன் போலவே சற்று உப்பியதாக வரும் அதை எடுத்து
தேவையான அளவு பைவுல்களில் வைத்து
அஸீதையோ. தேனையோ
அதன் மேல் ஊற்றி சாப்பிட்டால் அப்பப்பா அதன் டேஸ்ட் இருக்கே அது சாப்பிட்டால்தான் தெரியும் மிருதுவாய் சாப்பிட ருசியாய் இருக்கும்.
அரபிகளின் இனிப்பு பதார்த்தங்களில் இதுவும் ஒரு மெயின் டிஸ். இங்கே ஃபெஸ்டிவேல் மற்றும் விசேச நாட்களில் அவர்கள் இதை சுட்டும் தரும்போதே இரண்டு மூன்று பிளேட் வாங்கி அப்படியே சாப்பிடுவோமுல்ல. சிறிய பிளேட் 5 திர்கம்தான்.
நாங்க வாரத்தில் இருமுறை செய்துவிடுவோம் பசங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்
மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ.
இந்த மாவு ரெடிமேடாகவும் இங்கே கிடைக்கிறது அதையும் பிசைந்துவைத்துதான் ஆயிலில் பொரித்தெடுக்கனும்..
சுட்டு சாப்பிடுங்கோ இனி இது நம்ம உணவு ஓகே..
//குஸ்கி --சுட்டு டேஸ்ட் அன் டெஸ்ட் பாத்துவிட்டு எனக்கு மூன்று பிளேட் பார்சல்.என்னது வெரும் பிளேடா ,,,ஆங் அஸ்கு,, டம்ளிங்கோட அக்ரிமெண்ட் ந்னுனா கரகீட்டா இருக்கோனும்.
நம்ம ஸாதிகாக்காதான் அரபி ஃபுட் எக்ஸ்போட்டாமே. அச்சோ அந்த ஏற்றுமதியல்லங்கோ இதுபோல் செய்து அசத்துரதுக்கு[அவங்க பக்கம்போனா என்னாமா போட்டா புடிச்சி போட்டுகீறாங்கோ அதெல்லாம் சுட்டதாம் இல்லக்கா[அந்த சுட்டது ஒகே ] கத்தார் டம்ளிங் எனக்கு வேணும் ஹூம் ஹூம் ஹூம்]
Sunday, April 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நாந்தானுங்க..
- அன்புடன் மலிக்கா
- தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.
45 comments:
super.
//டம்ளிங்//
பெயரே வித்தியாசமா இருக்கு......கமெடியன் செந்தில் போல் பெயர் வைக்கவில்லையே..
இது பொதுவா நோன்பு நேரத்துலதான் கிடைக்கும். போன வாரம் ஃபெஸ்டிவல் நடக்குறதால ரெண்டு பிளேட் (பாட்டி சுட்ட வடை மாதிரி 25 திர்ஹம் )அடிச்சிட்டு வந்தேன் .ஒரு வேளை என்னைய பாத்துட்டு ஏமாத்திட்டாங்களோ ?
//மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ//
யக்கோவ் அப்படியே சவுதி கெப்ஸா எப்படின்னு ஒரு ரெஸிபி கேட்டு போடுங்களேன். இங்கே கிடைப்பது எல்லாம் மந்தி, கொரங்கு , குட்டி போலதான் இருக்கு. சரியான அதே டேஸ்ட் எங்கேயும் இல்ல.
Ammu Madhu said...
super.
மிக்கநன்றி அம்மு.
/நாடோடி said...
//டம்ளிங்//
பெயரே வித்தியாசமா இருக்கு......கமெடியன் செந்தில் போல் பெயர் வைக்கவில்லையே!
என்னா கேள்வி கேட்டுப்புட்டீக ஸ்டீபன்.
இது அதுவேதான். நாம வைக்கலேங்கோ அவுகதான் பேரு வச்சிருக்காக.
உங்களுக்கு வேறப்பேரு புடிச்சத்துன்னா அதையே இதுக்கு சூட்டிடல்லாம்.
ஜெய்லானி said...
இது பொதுவா நோன்பு நேரத்துலதான் கிடைக்கும். போன வாரம் ஃபெஸ்டிவல் நடக்குறதால ரெண்டு பிளேட் (பாட்டி சுட்ட வடை மாதிரி 25 திர்ஹம் )அடிச்சிட்டு வந்தேன் .ஒரு வேளை என்னைய பாத்துட்டு ஏமாத்திட்டாங்களோ ?/
நோன்பு மற்றும் ஃபெஸ்டிவேல் கிடைக்கும். இது அடிக்கடி வேணுமுன்னா நாமளே ஃபெஸ்இவேல் வச்சுக்கவேண்டியதுதான்.
என்னது 25 திர்கமா?!!!!!!!!!. ஜெய்லானி பெயிய பிளாட்டா ச்சே பிளேட்டா இருந்திருக்கும். யானைக்கு எதக்குயித்தாலும் எல்லாம் சோளப்பொறியாட்டம்தான் தெரியுமாம்.
பச்ச்கொயந்தமாதரி முகத்தவச்சிக்கின்னு போனா ஏமாத்தாம என்ன செய்வாக. ஒரு வேள பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஆளுன்னு நெனச்சிட்டாகளோ என்னவோ.
ஜெய்லானி said...
//மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ//
யக்கோவ் அப்படியே சவுதி கெப்ஸா எப்படின்னு ஒரு ரெஸிபி கேட்டு போடுங்களேன். இங்கே கிடைப்பது எல்லாம் மந்தி, கொரங்கு , குட்டி போலதான் இருக்கு. சரியான அதே டேஸ்ட் எங்கேயும் இல்ல..//
எங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சிப்போனது அந்த கப்ஸாதானுங்க.
கப்ஸாவா கெப்ஸாவா
ஒயுங்க சொன்னாத்தேன் ரெஸிபி கிடைக்கும்..
நிச்சியமா அடுத்த டிஸ் அதுதான். அது நாங்களும் போடுவோம் என்ன இடையில் கொஞ்சம் கெ[ஹெ]ல்பு மட்டும் கேட்டுக்குவோம்..அடுப்பு எப்படி பத்தவக்கிறது அப்படின்னு சின்ன சின்ன டவுட்மட்டும்..
மெயிலில் பத்து டம்ளிங்
அட்டாச் பண்ணி
அனுப்பிவிடுங்க.
தலைப்பை படிச்சிட்டு, செந்தில் விளையாண்ட கப்ளிங் மாதிரியோன்னு நினைச்சேன். சாப்பாட்டு அயிட்டம் நல்லாருக்கு.
என்ன ராத்தா அசத்திடியல? ஈமெயில் பாத்தீங்களா?
பாத்திமா ஜொஹ்ரா said...
என்ன ராத்தா அசத்திடியல? ஈமெயில் பாத்தீங்களா?//
அப்படியா தங்கச்சி நன்றிமா.
எப்போது அனுப்பியது வரலையே பாத்திமா
ஹை டம்ளிங்கா, அரபி பெண் போட்டோ எடுக்க விட்டாங்களா இல்லை தெரியாமல் ஒளிந்து இருந்து எடுத்தீஙக்லா?
செய்து பார்த்துடுவோம், இத மச்சான் செய்து கொடுத்து சாப்பிட்ட மலிக்கா ரொம்ப கொடுத்து வச்ச்வங்க.
இத பற்றி மீதிகதைய அபப்ரம் எழுதுரேன்
இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச புள்ளைய ஆளாளுக்கு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க ஆமா!!
மலிக்கா...நோன்பு நேரத்தில் கிடைக்கிறதை இப்ப கேட்டால்...கத்தாரில் டம்ளிங் உண்டா?வேற வழி இல்லை.உங்கள் ஆளின் ரெஸிப்பியையைப்பார்த்து செய்துட வேண்டியதுதான்.கப்ஸா சோறின் டேஸ்ட்டில் பிரியாணி எல்லாம் மற்ந்து விட்டது.தாளிப்பில் போடும் காய்ந்த எலுமிச்சை,மசாலா எல்லாம் வாங்கி வைத்து இருக்கிறேன்.சீக்கிரம் உங்கள் ஸ்டைல் கப்ஸா சோறு குறிப்பு போடுங்கள்.ஊருக்கு போனதும் முதல் வேலையா செய்துவிடவேண்டும்.
////மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ////
unmaiya sonnathukku nanri...
unga machanukkuthaan nanri sollonum..!
paavam avaru...!
sari...sari... indha menuva printout eduthu en veettammavidam kodukkuren...
enna solranga parkkalam..!
natpudan...
Kanchi Murali...
@@@நாஸியா--//இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச புள்ளைய ஆளாளுக்கு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க ஆமா!!//
நீங்க ரொம்ப சமத்து ,என்னைதானே சொன்னீங்க!!!
வித்யாசமா இருக்கு செய்து பார்த்துவிடுவோம்.
சலாம் ராத்தா.உங்க ஃபோட்டோ சூப்பரா இருக்குதுக்கோவ்.ஒரு கடையே!தெரந்துட்டாப்புல இருக்கே வியாபாரம்லாம் எப்புடி இருக்கு? ஹா ஹா.சமையல் நல்லா இருக்கு
சலாம் ராத்தா.உங்க ஃபோட்டோ சூப்பரா இருக்குதுக்கோவ்.ஒரு கடையே!தெரந்துட்டாப்புல இருக்கே வியாபாரம்லாம் எப்புடி இருக்கு? ஹா ஹா.சமையல் நல்லா இருக்கு
கம்ப்யூட்டருக்குள்ள கைவிட்டு எடுக்கமுடியும்னா எல்லாம் ஒரு நிமிசத்துல காலியாகிடும்.... பார்க்கும்போதே ரொம்ப அருமையா இருக்கு மலிக்கா... அசத்துங்க!!!
சூப்பராக இருக்கின்றது...எனக்கும் ஒரு ப்ளேட் பார்சல்...
பாத்தா, நம்ம ஊரு முட்டை போண்டா மாதிரி இருக்கு.. அப்பா இதுக்கு, 'பேரிச்சை போண்டா' இல்ல 'தேன் போண்டா'னு பேர் வச்சிர்லாமா...?
டம்ளிங்க் அரபி பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.
படத்தை எகிப்திய செக்ரட்டரிகிட்ட காட்டினேன்.அதற்கு பெயர் பளாவா.
Madumitha said...
மெயிலில் பத்து டம்ளிங்
அட்டாச் பண்ணி
அனுப்பிவிடுங்க.//
வந்துக்கிட்டேயிருக்கு மதுமிதா. பாத்து திறங்க மெயில //டப்புன்னு வெடித்திடப்போகுது..
அமைதிச்சாரல் said...
தலைப்பை படிச்சிட்டு, செந்தில் விளையாண்ட கப்ளிங் மாதிரியோன்னு நினைச்சேன். சாப்பாட்டு அயிட்டம் நல்லாருக்கு//
அடடா ஏமாத்திட்டேனா. அதுக்குதான் நம்ம ஊர் பெயராபாத்து வைக்கோனும் இல்ல அமைச்சாரல்..
Jaleela said...
ஹை டம்ளிங்கா, அரபி பெண் போட்டோ எடுக்க விட்டாங்களா இல்லை தெரியாமல் ஒளிந்து இருந்து எடுத்தீஙக்லா?//
என்ன குசும்பு பாத்தீகளா இந்த ஜலீக்காவுக்கு. நான் ஏன் ஒளிந்து எடுக்கனும் நேராவே எடுத்தேன் கூகிளில் ஹா ஹா ஹா.
/செய்து பார்த்துடுவோம், இத மச்சான் செய்து கொடுத்து சாப்பிட்ட மலிக்கா ரொம்ப கொடுத்து வச்ச்வங்க. //
செய்து பார்த்துடுங்க மல்லி எப்பவுமே கொடுத்து வச்சவதான்க்கா. அது சரிஎத கொடுத்து வச்சேன்..
இத பற்றி மீதிகதைய அபப்ரம் எழுதுரேன்..
ஹை அக்கா கத எழுதப்போறாங்களாம் எல்லாம் ரெடியா..
நாஸியா said...
இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச புள்ளைய ஆளாளுக்கு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க ஆமா!!//
அச்சோ அச்சோ பாவம்மா பச்சபுள்ள
அழதே சின்னப்புள்ள சீக்கிரம் அல்லாமே கொண்டுவரேன்..
ராஜ நடராஜன் said...
டம்ளிங்க் அரபி பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.
படத்தை எகிப்திய செக்ரட்டரிகிட்ட காட்டினேன்.அதற்கு பெயர் பளாவா.//
இதுக்கு இப்படி ஒரு பெயர் உண்டா. நானும் இப்பதான் அறிகிறேன்.
இங்கே[துபையில்] இதை இப்படித்தான் [டம்ளிங்]கூறுகிறார்கள்.ராஜா
தாங்களின் வருகைக்கும், அறியாததை அறிந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி..
ஸாதிகா said...
மலிக்கா...நோன்பு நேரத்தில் கிடைக்கிறதை இப்ப கேட்டால்...கத்தாரில் டம்ளிங் உண்டா?வேற வழி இல்லை.உங்கள் ஆளின் ரெஸிப்பியையைப்பார்த்து செய்துட வேண்டியதுதான்.கப்ஸா சோறின் டேஸ்ட்டில் பிரியாணி எல்லாம் மற்ந்து விட்டது.தாளிப்பில் போடும் காய்ந்த எலுமிச்சை,மசாலா எல்லாம் வாங்கி வைத்து இருக்கிறேன்.சீக்கிரம் உங்கள் ஸ்டைல் கப்ஸா சோறு குறிப்பு போடுங்கள்.ஊருக்கு போனதும் முதல் வேலையா செய்துவிடவேண்டும்..//
என்னது கத்தாரில் இல்லையா?
ஏன்க்கா நான்கேக்கலை சரியா.
மச்சான் செய்யும் கப்ஸா சோறு விரைவில் வெள்ளீக்கிழமை போட்டுட்டாப்போச்சி..
ஏதோ எங்களுக்கு தெரிந்தமுறையில் அப்பால அது சரியில்ல இது சரியில்லன்னுச்சொல்லக்கூடாது ஓகே..
அட இந்த கொடுமைய பாருடா. மீதி பதிவு அப்பரம் எழுதலாமுன்னா. இன்றும் முடியல பிறகுபார்ப்போம்.
இதென்னா மங்குவுக்க்கு ஈக்வலா, குஸ்கி டுஸ்கி..
வித்தியாசமாக இருக்கிறது . அப்படியே கொஞ்சம் அனுப்பி இருக்கலாமே? நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி ?
செம சூப்பர் அக்கா, கலக்கீடீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
malarvizhi"வித்தியாசமாக இருக்கிறது . அப்படியே கொஞ்சம் அனுப்பி இருக்கலாமே? நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி ?”
மிக்க நன்றி மலர்விழி,அனுப்பிவைதேனே கிடைத்ததா!!!!!!!!!!!
சசிகுமார் said...."செம சூப்பர் அக்கா, கலக்கீடீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"
மிக்க நன்றி சசிகுமார்.........
காஞ்சி முரளி said...
////மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ////
unmaiya sonnathukku nanri...
unga machanukkuthaan nanri sollonum..!
paavam avaru...!
sari...sari... indha menuva printout eduthu en veettammavidam kodukkuren...
enna solranga parkkalam..!
natpudan...
Kanchi Murali...//
என்ன பாவமா எங்களுக்குதானே செய்து தந்தாக . அச்சோ இதக்கேட்க யாருமேயில்லையா இதுக்குதான்
உண்மையையே சொல்லக்கூடாதுப்பா..
நன்றி முரளி..
ஜெய்லானி said...
@@@நாஸியா--//இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச புள்ளைய ஆளாளுக்கு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க ஆமா!!//
நீங்க ரொம்ப சமத்து ,என்னைதானே சொன்னீங்க!!!//
ஹைடோட இதப்பாருங்கடா பச்சபுள்ளைகளா கூடிக்கின்னு கெடக்குது..
இதில் சமத்துவேறு.
நான்தான் சமத்துப்புள்ளயே இது தெரியாம இருக்குதுகளேஏஏஏஏஏஏஏஏஎ
sarusriraj said...
வித்யாசமா இருக்கு செய்து பார்த்துவிடுவோம்.
செய்து பாத்துடுங்க சாருக்கா
/sabeeca said...
சலாம் ராத்தா.உங்க ஃபோட்டோ சூப்பரா இருக்குதுக்கோவ்.ஒரு கடையே!தெரந்துட்டாப்புல இருக்கே வியாபாரம்லாம் எப்புடி இருக்கு? ஹா ஹா.சமையல் நல்லா இருக்கு..//
அட தெரியாத சபி, கடைக்கு பாட்னரே நீங்கதேனே,
அது நீங்க சுடும்போது நான் என் கேமராவில் உங்களச் சுட்டதுன்னு.
உண்மையை உலக்கு சொல்லவச்சத்துக்கு நொம்ப நன்னிங்கோ..
கவிதன் said...
கம்ப்யூட்டருக்குள்ள கைவிட்டு எடுக்கமுடியும்னா எல்லாம் ஒரு நிமிசத்துல காலியாகிடும்.... பார்க்கும்போதே ரொம்ப அருமையா இருக்கு மலிக்கா... அசத்துங்க!!!//
ஆச தோச அப்பளம் வடை.
இப்படியெல்லாம் வழியிருந்தா நான் சமைக்கவே மாட்டேனே. ஒரு ஒரு சமையல் பிளாக் பக்கம்போய் ஆட்டயபோட்டுவிடலாமே கவிதன்..
ரொம்ப நன்றி கவிதன்
Geetha Achal said...
சூப்பராக இருக்கின்றது...எனக்கும் ஒரு ப்ளேட் பார்சல்.//
பிளேட்தானே இதோ இப்பவே அனுப்புகிறேன் கீது.
அப்துல் பாஸித் said...
பாத்தா, நம்ம ஊரு முட்டை போண்டா மாதிரி இருக்கு.. அப்பா இதுக்கு, 'பேரிச்சை போண்டா' இல்ல 'தேன் போண்டா'னு பேர் வச்சிர்லாமா.//
வாங்க வாங்க பாஸித்.
நல்லா பேர் வக்கிறீங்களே!
பேரிச்சைதேன் போண்டான்னு வச்சிரலாம் ஓகே.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
அய்யா ! நான் இங்குதான் இருக்கிறேன் இன்னைக்கே இந்த உணவு வாங்கிட வேண்டியதுதான் .
அருமை .
பகிர்வுக்கு நன்றி .
மீண்டும் வருவேன் அரபி உணவு வாங்கின பில் கொடுக்க .
So sweet! looks yummy!
Thank you for the recipe.
நான் இந்த டம்ளிங் ரெடி மிக்ஸ் வாங்கி செய்திருக்கேன்,குலோப்ஜாமுன் மாதிரி அருமையாக இருக்கு.
மல்லிக்கா கிட்டத்தட்ட வாய்ப்பன் வாழைப்பழம் சேர்த்து இப்படித்தானே செய்வாங்க.ஆனாலும் இனிப்புப் பிரியர்களுக்கு நீங்கள் தந்த டம்ளிங் அருமைதான்.
ரொம்ப சிம்பிளா இருக்கே. அவசியம் செய்திட வேண்டியது தான். ஏன்னா என் குட்டிஸுக்கும் டம்பிள்ங் ரொம்ப பிடிக்கும். (சைனிஸ் டம்பிள்ங்) செய்த்ருக்கேன்.
Post a Comment