அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, April 27, 2010

வெங்காயக்கறி..

//இது நம்மோடதல்ல சுட்டது//

தேவையானவை


சிறியவெங்காயம் 150 கிராம்
பச்சைமிளகாய் 3
சோம்பு சீரகப்தூள் 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்1 ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட்ட் 1ஸ்பூன்
மிளகாய்தூள் 1/2 ஸ்பூன்
முட்டை 1
தேங்காய்பால் 1கப்
தக்காளி 1
உப்பு
ஆயில்
இடியப்பமாவு 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி

தாளிக்க:
கடுகு, உளுந்து, பூண்டு2 பீஸ், கருவேப்பில்லை,

ஒரு கடாயில் தேவையான ஆயில்விட்டு காய்ந்ததும் கடுகுபோட்டுவெடித்ததும் உளுந்து
பூண்டுகட்செய்தது கருவேப்பில்லைபோட்டு,
 பின்பு
வெங்காயத்தை இரண்டாக நறுக்கியும், அதனுடன் பச்சைமிளகாய்போட்டு
லேசாக வதங்கியதும்
கொஞ்சம் தண்ணீரில் மசாலாக்களுடன், உப்புபோட்டு அதனுடன் சேர்த்துமூடிவைக்கவும்.

மசாலா வாசம்போனதும்
திறந்து முட்டைஊற்றி கிளறிவிட்டு, வெந்ததும் இடியப்பமாவைதூவி
கிளறிவிட்டு தேங்காய்ப்பால் சேர்க்கவும்

கொஞ்சம் சதசதப்பாக இருக்கும்போது இறக்கிவிடவும்
கொத்தமல்லி தூவி சாப்பிடவும்.

இது மிகுந்த சத்தான உணவு.எனது உம்மம்மா[அம்மாவின் அம்மா]  இதை அடிக்கடி செய்து தருவார்கள். தற்போது அதெல்லாம் மிஸ்ஸிங்.

சாதம். சப்பாத்தி. குப்பூஸ். கூட சாப்பிடலாம்.
வெயில்காலத்தில் தண்ணீர் சத்து நிறைய தேவைப்படும், அப்போது இதேபோல் தண்ணீர் சத்துள்ள சாப்பாட்டு அயிட்டங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது..


மிஸ்கி;; [ரெசிப்பி செய்யும்போது போட்டோ புடிக்கல. அச்சோ போட்டோ எடுக்கல அதான் இப்புடி]
என்னாடா சிறிய வெங்கயத்துல கறின்னு போட்டுவிட்டு பெரிய வெங்காயத்த படத்துல போட்டிருக்காளேன்னு பாக்குறீகலா. அதெல்லாம் சும்மா ஒரு டிரிக்குதான்.உடனே ஓடிவந்து ஜெய்லானி கேட்பாகல்ல. என்னதிது அந்த வெங்காயமுன்னு சொல்லிட்டு இந்த வெங்காயமான்னு,,, அதேன் முந்திக்கிட்டோம் எப்புடி./







அன்புடன் மலிக்கா

36 comments:

எல் கே said...

muttai serkama panna mudiuma ???
naan kekkalanu padichute vantha kadaisiya mundikittenga

அன்புடன் மலிக்கா said...

செய்யலாம் கார்த்தி.
ஆனால் இதன் டேஸ்ட் இருக்குமான்னு தெரியலையே ஏன்னா நாங்க இப்புடியே துண்ணு வளந்துட்டோம்..

அதுக்குதானே கீழே கொண்டுவந்து மிஸ்கியில் போட்டோம் இப்படியெல்லாம் கேட்பீகன்னு தெரியும்..

நாடோடி said...

குழ‌ம்பு வித்தியாச‌மா இருக்கு.... ப‌கிர்விற்கு ந‌ன்றி...

எல் கே said...

பொதுவா நான் பெரிய வெங்காயம் சாப்பிட மாட்டேன். சின்ன வெங்காயம்தான் சாப்பிடுவேன். முட்டை பத்தி கேட்டதுக்கு காரணம் நான் முயற்சி பண்ண

Chitra said...

வாசிக்கும் போதே வெங்காய கறி வாசனை, அசத்தலா வருகிற மாதிரி எழுதி இருக்கீங்க. :-)

Jaleela Kamal said...

அட இப்பூடியா படம் காண்பிப்பத்து, ஜெய்லானி வருவதற்குள் நானே கேட்பேனுல்ல.

நானும் ரெசிபிய படித்து விட்டு இங்கு முழு வெங்காயம்வரவே இல்லையே என்று நினைத்தேன்.

நானும் போடோ எடுக்காத ரெசிபி 100 கணக்குல இருக்கு படம் இல்லாமல் போடமல் இருக்கேன். இது நல்ல ஐடியா வா போச்சே மெனெக்கிடுர வேல மிச்ச்மாகிடுமே.


முதலில் வெங்காயத்த பார்த்ததும் அப்படியே அவித்து சாப்பிடனும் போல என்று நினைத்து கொண்டேன்./

ஸ்மால் ஆனியன், எக் கொத்சுநல்ல் இருக்கும.

ஜெய்லானி said...

ஜெய்லானி ? ?

உள்ளேன் டீச்சர் !!

சைவகொத்துப்பரோட்டா said...

பட விசயத்துல மிஸ்கி போட்டு தப்பிசிட்டீன்களே :))

ஜெய்லானி said...

வெங்காயத்தை பாத்தா ஓவன்ல வச்சி சுட்டது மாதிரிதங்க தெரியுது. அக்கோவ் ஆம்லட்டுல தேங்கா பால சேத்த மாதிரி தெரியுது. இது சைனீஸ் சமையலா ?

ஜெய்லானி said...

அக்கோவ் ..மலீகாக்கோவ்...வெங்காயத்தை காட்டி அழவச்சிட்டீங்களே...கப்ஸா வை காட்டி எப்ப சந்தோஷ பட வைக்க போறீங்க. ( வெள்ளிக்கிழமைன்னு சொன்னீங்க ஆனா எந்த வெள்ளிக்கிழமைன்னு சொல்லலியே )

ஜெய்லானி said...

ஓட்டு பெட்டியை கானேமே அதையும் போட்டு சமைச்சிட்டீங்களா ?

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான ரெசிபி டிரை பண்ணி பார்கிறேன்.

KULIR NILA said...

VENGAYAM NEGATIVE ENERGY

SO TRY TO AVOID ONION.

KONJAMA USE PANNALAM BUT FULL ITEM ADHA SAPTA TOXIN UNGA UDAMBULA ADHIGAMAAGUM.

செந்தில்குமார் said...

அருமையான குறிப்பு

ப.கந்தசாமி said...

நாங்கெல்லாம் கவுண்டர்லெ அய்யரு மாதிரிங்கோ, முட்டையும் சாப்டமாட்டோம், வெங்காயமும் சாப்டமாட்டோம், என்னங்க பண்றது?
(ரெண்டையும் அப்டியே பச்சயாத்தான் சாப்பிடுவங்க)

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...கண்டிப்பாக ட்ரை செய்து பார்க்கவேண்டும்...நன்றி

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
அக்கோவ் ..மலீகாக்கோவ்...வெங்காயத்தை காட்டி அழவச்சிட்டீங்களே...கப்ஸா வை காட்டி எப்ப சந்தோஷ பட வைக்க போறீங்க. ( வெள்ளிக்கிழமைன்னு சொன்னீங்க ஆனா எந்த வெள்ளிக்கிழமைன்னு சொல்லலியே/

வரும் ஆனாஆஆஆஆஆஆஆஆஆ
வரும்..
2 வெள்ளி வரதையும் சேத்துதான்.
இந்த பச்சபுள்ளக்கு சமையல் வேலையில்ல. அதான் போடமுடியல
இருந்தாலும் இந்த வாரத்துல போட்டு அழவச்சுடறேன் அச்சச்சோ சிரிக்கவச்சுடறேன் போதுமா
செய் லானி.

அன்புடன் மலிக்கா said...

/KULIR NILA said...
VENGAYAM NEGATIVE ENERGY

SO TRY TO AVOID ONION.

KONJAMA USE PANNALAM BUT FULL ITEM ADHA SAPTA TOXIN UNGA UDAMBULA ADHIGAMAAGU//

வாங்க குளிர்நிலா. வெங்காயத்தை மட்டும்தான் கூடுதலாக்கி அப்படியே சமைச்சு சாப்பிடக்கூடாது.

ஆனால் இதில் முட்டை மற்றும் இடியப்பமாவு தேங்காய்ப்பால் சேர்ப்பதால். பிராப்ளம் இல்லையின்னு நினைக்கிறேன்..

இருந்தாலும் கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி வருக்கைக்கு மிக்க மகிழ்ச்சி..

செந்தமிழ் செல்வி said...

நாங்க முட்டை போடாமல் சும்மா இது போல் செய்வோம். ஒரு வேளை எங்கம்மா முட்டை சாப்பிடாததால் இப்படி செய்தார்களோ, என்னவோ. நானும் முயற்சிக்கிறேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Nalla irukkunga receipe..

padam idea kalakkiteeenga ponga.. :D

Diski.. innum suparappu :) :)

அன்புடன் மலிக்கா said...

/LK said...
பொதுவா நான் பெரிய வெங்காயம் சாப்பிட மாட்டேன். சின்ன வெங்காயம்தான் சாப்பிடுவேன். முட்டை பத்தி கேட்டதுக்கு காரணம் நான் முயற்சி பண்ண//


முயற்சி பண்ணனுங்க கார்த்தி சாப்பிட்டு பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க டேஸ்ட் எப்புபுடின்னு..

மிக்க நன்றி கார்த்திக்.

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
வாசிக்கும் போதே வெங்காய கறி வாசனை, அசத்தலா வருகிற மாதிரி எழுதி இருக்கீங்க. :-)//

நிஜமாலுமே இது வாசனை அசத்தலாக இருக்கும் சித்ராமேடம்.
அசத்தலான கருத்துக்கு மிக்க நன்றி தோழிமேடம்..

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
அட இப்பூடியா படம் காண்பிப்பத்து, ஜெய்லானி வருவதற்குள் நானே கேட்பேனுல்ல.

நானும் ரெசிபிய படித்து விட்டு இங்கு முழு வெங்காயம்வரவே இல்லையே என்று நினைத்தேன்.//

ஹைய்யா அதுக்குதான் முந்திக்கிட்டோமேஏஏஏஏஏஏஏஏஎ

//
நானும் போடோ எடுக்காத ரெசிபி 100 கணக்குல இருக்கு படம் இல்லாமல் போடமல் இருக்கேன். இது நல்ல ஐடியா வா போச்சே மெனெக்கிடுர வேல மிச்ச்மாகிடுமே.//

ஆகா கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க.இனி ரெசிபி அயிட்டம் எக்கச்சக்கமா வந்து கொட்டப்போகுதா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


//முதலில் வெங்காயத்த பார்த்ததும் அப்படியே அவித்து சாப்பிடனும் போல என்று நினைத்து கொண்டேன்./

ஸ்மால் ஆனியன், எக் கொத்சுநல்ல் இருக்கும.//

அவித்தும் சாப்பிடலாமோ ஹூம் ஹூம்.

மிக்க நன்றி ஜலீக்கா.




ஜெய்லானி said...
ஜெய்லானி ? ?

உள்ளேன் டீச்சர் !!//

எதுக்குள்ளே சார்!!!!!!!!!!!

அன்புடன் மலிக்கா said...

சைவகொத்துப்பரோட்டா said...
பட விசயத்துல மிஸ்கி போட்டு தப்பிசிட்டீன்களே :))//

அப்ப மாட்டுவேன்னு நெனச்சீகளோ..
கொத்துப்பராட்டாவோடு போட்டு கொத்திடலாமுன்னு..

அன்புடன் மலிக்கா said...

/ஜெய்லானி said...
வெங்காயத்தை பாத்தா ஓவன்ல வச்சி சுட்டது மாதிரிதங்க தெரியுது. அக்கோவ் ஆம்லட்டுல தேங்கா பால சேத்த மாதிரி தெரியுது. இது சைனீஸ் சமையலா ?/

தெரியுதா.அதேதான் ஆனா நான் சுடல..

அப்புறம் இது எங்க உம்மாவின் சமையல். சைனீஸுக்கெல்லாம் அவுங்க போகலையின்னு நெனக்கிறேன்.
இருந்தாலும் கேட்டு சொல்லுறேன் ஆனா இப்பயில்ல. ஏனா எப்போன்னு தெரியல.
நான் மேலபோக எப்போ நாள்குறிச்சிவச்சிருக்கோ தெரியலையே அண்ணாத்தே..ஹி ஹி ஹி

அன்புடன் மலிக்கா said...

sarusriraj said...
வித்யாசமான ரெசிபி டிரை பண்ணி பார்கிறேன்.//

வாங்கக்கா. டிரைப்பண்ணிப்பாருங்க. சூப்பராக இருக்கும் நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா said...

செந்தில்குமார் said...
அருமையான குறிப்பு//

மிக்க நன்றி செந்தில்...

அன்புடன் மலிக்கா said...

Dr.P.Kandaswamy said...
நாங்கெல்லாம் கவுண்டர்லெ அய்யரு மாதிரிங்கோ, முட்டையும் சாப்டமாட்டோம், வெங்காயமும் சாப்டமாட்டோம், என்னங்க பண்றது?
(ரெண்டையும் அப்டியே பச்சயாத்தான் சாப்பிடுவங்க)//

அச்சச்சோ அவுகளா நீங்க.
அப்ப கேஸ் சிலவு. மற்ற எக்ஸ்ட்ரா சிலவுகள் மிச்சமோ மிச்சம் டாக்டர்.
இதையே எல்லோரும் ஃபாலோபண்ணினான்னா. எவ்வளவு சவுகரியமாயிருக்கும் இல்ல டாக்டர்..

மிக்க நன்றி டாக்டர் நல்ல ஐடியா கொடுத்தமைக்கு..




Geetha Achal said...
சூப்பராக இருக்கின்றது...கண்டிப்பாக ட்ரை செய்து பார்க்கவேண்டும்...நன்றி

அன்புடன் மலிக்கா said...

Geetha Achal said...
சூப்பராக இருக்கின்றது...கண்டிப்பாக ட்ரை செய்து பார்க்கவேண்டும்...நன்றி//

செய்துபாருங்க, பாத்துச்சொல்லுங்க சமையரசி..

அன்புடன் மலிக்கா said...

செந்தமிழ் செல்வி said...
நாங்க முட்டை போடாமல் சும்மா இது போல் செய்வோம். ஒரு வேளை எங்கம்மா முட்டை சாப்பிடாததால் இப்படி செய்தார்களோ, என்னவோ. நானும் முயற்சிக்கிறேன்//

இருக்கலாம் செல்வியக்கா. நீங்களும் முட்டை சாப்பிடமாட்டேளா.?சாப்பிடுவதாக இருந்தால் செய்துபாருங்க இல்லையின்னா அம்மா ஸ்டைலையே ஃபாலோபண்ணுங்க..

நன்றிக்கா..


//Ananthi said...
Nalla irukkunga receipe..

padam idea kalakkiteeenga ponga.. :D

Diski.. innum suparappu :) :)//

ஹைய்யா அப்ப இதுபோல ஓக்கே ஆயிடுத்துமல்லி இனி ஆடு ஆட்டத்த..

மிக்க நன்றி ஆனந்தி. உங்க போட்டோவுல நான் ரொம்ப அழகாயிருக்கேன் இல்லையா ஆனந்தி.
ஜாஸ்மீன்தானே மல்லி.

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நல்ல இருக்கு அக்கா, உடனே வீட்ல சொல்லி செய்ய சொல்ல வேண்டியது தான். பிரிண்ட் எடுத்தாச்சு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அக்கா,

கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.

உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.

தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.

வாழ்த்துக்கள்.

Ananya Mahadevan said...

vandhuttomla?
Very attractive blog! paalo pannikkaren. :P

ப.கந்தசாமி said...

பரவாயில்லீங்களே, பின்னூட்டத்தயெல்லாம் படிச்சுட்டு பதிலும் பதிவு பண்ணறீங்களே, ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க, பதிலும் சூப்பர்.

மனோ சாமிநாதன் said...

வெங்காயக்கறி வித்தியாசமாக நன்றாக இருக்கிறது, மலிக்கா!

Krishnaveni said...

Nice blog...interesting topics...never tried this recipe...sounds good. Thanks a lot for dropping by and excellent comment about my blog

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.