அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, September 28, 2010

சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்

இது என்னுடைய 100,வது பதிவு. எந்தளத்திற்க்கு வந்து என்படைப்புகளை தவறாமல்படித்தும் கருத்துக்கள் தந்தும் என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என்மனமார்ந்த நன்றிகள் பல பல.. தொடர்ந்து ஊக்கமென்னும் கருத்துமழை பொழியட்டும்.

 சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்

தேவையானவை

சமுன்
சிக்கன்
குக்கும்பர் [வெள்ளரி]
சீஸ்
கெச்சப்
மிளகு
சாட் மசாலா
ஆயில்
உப்பு
சிக்கனை சிறிய சிறிய பீசாக்கி அதை சாட்மசாலா.மிளகுத்தூள் உப்பு போட்டு நன்றாக கலந்து ஒரு பீங்கன் தட்டில் 2 ஸ்பூன் ஆயில் விட்டு அதன் மேல் இந்த கலவையை போட்டு லேசாக கலந்து அதை 15 நிமிடம் ஓவனில் வைத்தால் இதுபோன்று ரெடியாகிவிடும்.

அதை சமுனில் நடுபாகம் கீரி அதனுள் சீஸ் அல்லது மயோனஸ் தடவி அதன்மேல்
                                                தேவைக்கேற்ப சிக்கன் வைத்து

                             அதன் மேல் நறுக்கிய குக்கும்பர் வைத்து பிரியப்பட்டால் அதன்மேல் கெச்சப் அல்லது சில்லிசாஸ் போட்டு மூடி

அதை ஒரு டிஷுவில் சுற்றி மேல்பாகத்தை திறந்து  சாப்பிடவும்.
”இது தான் சமுன் சிக்கன் சாண்ட்வெஜ்”


 சிக்கனுக்கு பதிலாக முட்டையும் வேகவைத்து கட்செய்து அதனுள் வைக்கலாம். வெஜிட்டபிள் அரைவேக்காடாக வேகவைத்தும் அதனுள் வைத்து சாப்பிடலாம்..சாப்பிடக்கொடுக்கலாம்..
இன்னும் இந்த சமுனில் நிறைய வெரைட்டிகள் செய்யலாம். குழந்தைகளின் ரசனைக்கேற்ப. ருசிக்கேற்ப..

டிஸ்கி//இதெல்லாம் பிடிக்காதவங்க இந்த சமுனை காபியிலோ. டீயிலோ நனைத்து சாப்பிடலாம். அதுவும் பிடிக்கலையே சும்மா அப்படிய்ய்யே சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது அப்புறம் தொண்டையில் போய் அடைச்சிக்கிச்சின்னா  நான் வந்து தண்ணீரோ வெந்நீரோ தர இயலாது சொல்லிப்புட்டேன்.


இது தமிழ்குடும்பத்திற்காகன 4.வது போட்டிக்குறிப்பு.
முடிந்தால் இங்கும் சென்று கருத்திடுங்கள்.
                                                   
                                                              அப்புறம்

ஆனந்தி தந்த அன்பான நட்பு.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டா இதை வெளியிடுவதற்கு
கோவிச்சிக்காதீங்க ஆனந்தி..நீங்க 100,வது க்கு தந்த விருதை.
என் நூறாவது பதிவில் வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறேன்..
நன்றி ஆனந்தி
என்றும் உங்கள் நட்பாய்

அன்புடன் மலிக்கா

17 comments:

Suni said...

Vow super. அப்படியே சாப்பிடலாம்
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

மனோ சாமிநாதன் said...

சமூன் சாண்ட்விச் நன்றாக இருக்கிறது!
நூறாவது பதிவிற்கு என் இதயங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!
விரைவில் 200 வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

Unknown said...

வாழ்த்துக்கள் அக்கா.. இன்னும் பல 100 குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

முதல்ல 100க்கு வாழ்த்துக்கள....!!!

ஜெய்லானி said...

//தேவையானவை

/// சமுன் //

இதுக்கு தமிழ்ல எந்தானு பேரு

//சிக்கன் //

இதுக்கு எந்தா பறையான் நிங்கள்

///குக்கும்பர் [வெள்ளரி] //

இட்ஸ் நைஸ் சோ..ஸ்வீட்..

//சீஸ் //


இஸ்கா க்யா நாம் ஹை தாமில்மே

//கெச்சப் ///

சூஸ்முக் ஹாதா லுகாத்தாமிலியா

மிளகு

//சாட் மசாலா //

மே நம தமிழ் மொக்கத

//ஆயில் உப்பு //

சேச்சி எந்தா பறையுந்னு ஆயில் உப்போ..? அங்னத்த ஒரு சாதனம் உண்டோ சேச்சி பரையூ..!!

அன்புடன் மலிக்கா said...

வாங்க சுனிதா. வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி..

வாங்க மனோமேடம் நல்லாயிருக்கீங்களா.
தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.


மிகுந்த சந்தோஷம் ஃபாயிஜா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அண்ணாத்தே வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//தேவையானவை

/// சமுன் // பன்

இதுக்கு தமிழ்ல எந்தானு பேரு

//சிக்கன் // கோழி

இதுக்கு எந்தா பறையான் நிங்கள்

///குக்கும்பர் [வெள்ளரி] //

இட்ஸ் நைஸ் சோ..ஸ்வீட்..

//சீஸ் // வெண்ணை


இஸ்கா க்யா நாம் ஹை தாமில்மே

//கெச்சப் /// இனிப்பு தக்காளிசாரு

சூஸ்முக் ஹாதா லுகாத்தாமிலியா

மிளகு

//சாட் மசாலா // சிலவகைமசாலா பொருள்களை ஒன்றாக்கியது அதை சாட் கட்டில்[சுறுக்கி] சொன்னோம்

மே நம தமிழ் மொக்கத

//ஆயில் //

உப்பு //

சேச்சி எந்தா பறையுந்னு ஆயில் உப்போ..? அங்னத்த ஒரு சாதனம் உண்டோ சேச்சி பரையூ..!!//

வேற ஒண்ணும்மில்லசேட்டா
அது சின்ன மிஸ்டேக்காயி

ஆயில் [எண்ணை]

உப்பு

தாழத்தவரவேண்டியது ரெண்டு கூடி வந்னு அதுதன்னே!

நிங்கள் செரியான விஞ்ஞானிதன்னே
இல்லங்கில் இங்கினத மிஸ்டேக்கெல்லாம் கண்டுபிடிக்காம்பட்டும்..


bபைய்யா. ஹிந்தி நகி மாழுமே

ஸாதிகா said...

100 க்கு வாழ்த்துக்கள் மலிக்கா.சமூன் சிக்கன் சான்வெஜ் பிள்ளைகளுக்கு பிடித்தமான ஒன்று.அவசியம் செய்து பார்த்துவிடுகின்றேன்.

நாடோடி said...

100-க்கு வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

காஞ்சி முரளி said...

இன்று.... 100
நாளை..... 1000
இப்படியே தொடரட்டும்
மலிக்காவின்
வலைதள... வெற்றிப் பயணம்....!

***********************************
100க்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..
***********************************

நட்புடன்...
காஞ்சி முரளி...

'பரிவை' சே.குமார் said...

சமூன் சாண்ட்விச் நன்றாக இருக்கிறது!
நூறாவது பதிவிற்கு என் இதயங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. எங்கப் பாத்தாலும் 50, 75, 100, ஒரு வருஷம், 400னு பதிவுகள் வாயப் பிளக்க வைக்குது. (அதுக்குள்ள உங்க சிக்கன் சமூனைப் போடுங்க).

வாழ்த்துகள் மலிக்கா!!

//ஆயில் உப்பு //

புது வகை உப்பு போல!! ;-)))

உங்ககிட்ட மைக்ரோவேவ் சமையல் பத்தி எழுதச்சொல்லி ரொம்பநாள் ஆகுது, ஞாபகம் இருக்காம்மா? ;-)))

Jaleela Kamal said...

ஃபஹூத் அச்சா சிக்கன் சாண்ட்விச்.
மேரா பச்சோங் கேலியே பஹூத் பசந்தே.


வாவ் அருமையான இருக்கு.
நாங்கபின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு தான் தான் சரியா/




100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மலிக்கா

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ம்ம்.. எங்கப் பாத்தாலும் 50, 75, 100, ஒரு வருஷம், 400னு பதிவுகள் வாயப் பிளக்க வைக்குது. (அதுக்குள்ள உங்க சிக்கன் சமூனைப் போடுங்க).

வாழ்த்துகள் மலிக்கா!!//

வாழ்த்துகளுக்கு நன்றி.

//ஆயில் உப்பு //

புது வகை உப்பு போல!! ;-)))//

என்னா ஓரு நக்கலு ஹி ஹி

/உங்ககிட்ட மைக்ரோவேவ் சமையல் பத்தி எழுதச்சொல்லி ரொம்பநாள் ஆகுது, ஞாபகம் இருக்காம்மா? ;-)))//

ஆமால்ல சாரி ஹுசைனம்மா கொஞ்சந்தான் தெரியும் அதையும் வெகு விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்..

மிக்க நன்றிமா.

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
100 க்கு வாழ்த்துக்கள் மலிக்கா.சமூன் சிக்கன் சான்வெஜ் பிள்ளைகளுக்கு பிடித்தமான ஒன்று.அவசியம் செய்து பார்த்துவிடுகின்றேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றிக்கா

// நாடோடி said...
100-க்கு வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

நன்றி சகோ..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
இன்று.... 100
நாளை..... 1000
இப்படியே தொடரட்டும்
மலிக்காவின்
வலைதள... வெற்றிப் பயணம்....!

***********************************
100க்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..
***********************************

நட்புடன்...
காஞ்சி முரளி...
//

இதயங்கனிந்த வாழ்த்துக்களுகு மனமார்ந்த நன்றி சகோ..

//
சே.குமார் said...
சமூன் சாண்ட்விச் நன்றாக இருக்கிறது!
நூறாவது பதிவிற்கு என் இதயங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!//

அன்பு வாழ்த்துக்களுக்கு அன்பன நன்றி குமார்..

அன்புடன் மலிக்கா said...

Jaleela Kamal said...
ஃபஹூத் அச்சா சிக்கன் சாண்ட்விச்.
மேரா பச்சோங் கேலியே பஹூத் பசந்தே.//

ஓ சுக்ரியா சுக்ரியா..


வாவ் அருமையான இருக்கு.
நாங்கபின்னூட்டத்துக்கு கடைசி பெஞ்சு தான் தான் சரியா/

வாழ்துவதற்க்கு
எந்தபெஞ்சானாலும் சரி மனசுதான் வேணும்..



100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மலிக்கா
//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.