அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, November 3, 2010

தலை தீபாவளியா!


என்ன நாளைக்கு தீபாவளிக்கு இன்றைக்கே ரெடியாச்சா. இதென்ன கேள்வி நாங்க எப்பவோ ரெடி. அப்படியா. சரி என்ன புடவை . என்ன சுடி.
என்ன மெடி, என்ன பேண்ட், என்ன சட்டை. என்ன என்னகலர். .
என்ன என்ன பலகாரம் செய்திருக்கீங்க. எங்கெல்லாம் போக பிளான்.[பிளாஆஆஆஅன் பண்ணாம எதுவும் செய்யக்கூடாது ஓகே]அப்பாபடா.
ஒருவழியா கேட்டுமுடிச்சிட்டேன். டக்கு டக்குன்னு பதில்சொல்லுங்க பாப்போம்.

காலையில் எழுந்து எண்ணைதேய்த்து தலைமுழுகி. இறைவனைவேண்டி,
பட்டாடையணிந்து. பட்டாசுகொழுத்தி. பலகாரம்துண்ணு.
பந்தமெல்லாம் கண்டு, பாசம்பொங்க மகிழ்ந்து.
நட்பெல்லாம் கண்டு நேசத்தை பகிர்ந்து. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அடிச்சி கெளப்புவீகளோ ஆனந்த ஆர்ப்பாட்டம்.


[என்ன நல்லாயிருக்குதா எவ்ளோ கஷ்டப்பட்டு தேடிபுடிச்சி உங்களுக்கா வாங்கி தயார் செய்தேன் தெரியுமா..

என்ன தலை தீபாவளியான்னு கேட்டுபுட்டு ஒன்னும் சொல்லாம இருக்கீகன்னு கேட்குறீகளா. அது ஒன்னுமில்லை. தலை தீபாவளின்னு சொல்லி.பட்டுவேஸ்டி பட்டு சொக்கா. அச்சோ சட்டை.
மைனர் சையின் மாப்பிள்ளை மோதிரம். சீர் செனத்தி. ரொக்கப்பணம் இப்படி யார் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு இதோ இங்கே தரலாமுன்னுதான். [பாவங்கோ பொண்ணுவீட்டுகாங்கோ அவாளுக்கு எத்தனை சிரமமிருக்கும் அதான்]

என்னது இது நியாயமா அடுக்குமா அவாளுக்கு மட்டும்தானா எங்களுக்கெல்லாமில்லையா அப்படினெல்லாம் பின்னாலிருந்து சவுண்ட் வருவது நல்லாவே கேட்குது. இருங்கோ இருங்கோ. உங்களிக்கில்லாமலா.
அதுக்காக காஸ்ட்லியாவெல்லாம் கேட்ககூடாது கம்பேனிக்கு கட்டுப்படியாகாது ஓகே..[பாவம் பச்சபுள்ள கம்பேனி]

அப்புறம் எல்லாரும் நல்லபடியாக தீபாவளியை கொண்டாடுங்கோ அப்படியே பட்டாசு பக்கமும் கொஞ்சம் கவனமாக இருங்கோ. பசங்களை ஜாக்கரைதையா பாத்துக்கோங்க . அப்படியே பட்டாசு தொழிலில் பட்டமரமாகும் பச்சிளங்களையும் மனதில் கொள்ளுங்கோ. இருளில் இருக்கும் அவர்களுக்கும் ஒளிபோல் வாழ்கையமைய வேண்டுங்கள்.............................

இருங்கோ இருங்கோ அப்படியே பலகாரம் எதுநாச்சும் அனுப்புறத்துன்னு, மயிலு, மெயிலு.காக்கா. புறாக்கிட்டேயெல்லாம் கொடுதுடாமா நல்லபுள்ளையா கூரியரில் அனுப்புங்கோ.

டிஸ்கி// தலை தீபாவளி கொண்டாடடும் என் தோழி விஜயாவுக்கு ஒரு ஜே. அப்படியே வாழ்த்துகள் மணமக்களுக்கு..பல்லாண்டு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துக்கள்..

தீபாவளி கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும்
அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

அன்புடன் மலிக்கா

12 comments:

சாரதாவிஜயன் said...

அப்படிப்போடு சூப்பர் நல்லாயிருகுமா உன் ஷெலிபிரெஷன்.

என் மகளுக்கும் நாளைதான் தலைதீபாவளி. அது தெரிந்துதான் இதுபோட்டுள்ளாயா.

நன்றிமா. உன் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிமா..

அனைவருக்கும் என் அன்பான
தீபாவளி வாழ்த்துக்கள்..

செல்லம்மா உனக்கும் என் வாழ்த்துக்கள்..

சாரதா விஜயன்..

Jaleela Kamal said...

mmm koNdaadungkoo koNdadungkoo

அதிரை என்.ஷஃபாத் said...

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்..

www.aaraamnilam.blogspot.com

ராமலக்ஷ்மி said...

தீபாவளி வாழ்த்துக்கள்:)!

ஸாதிகா said...

அட்டகாச தீபாவளி.கலக்கறீங்க.

சிவகார்த்திகா said...

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

அடிச்சி ஆடுறேப்பா ஆடு ஆடு.ஆட்டத்தில் நானும் சேந்துகிறேன்ன்ன்ன்ன் கண்ணு..

ரொம்ப நன்றிகண்ணு..என்னமா செலக்‌ஷன் பண்ணியிருக்கே தேங்ஸ்பா..

மல்லின்னா மல்லிதான்

சிவகார்த்திகா

குழலினியன் said...

அனைவருக்கும் "தீபஒளித்திருநாள்"
வாழ்த்துக்கள்...!

- அன்புடன் குழலினியன்

ஜெய்லானி said...

தட்டுல இருக்குறது கொஞ்சம் கம்மியா தெரியுதே ..!! பரவாயில்லை சீக்கிரமா அனுப்புங்க ஹா...ஹா..!!(( முதல் , நடு ,கடைசியா இருக்கே அது வேணாஆஆஆஆஆஆம் ))

venkat said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

vijyan said...

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

வெரி நைஸ் அழகான டிசைனில் எங்களுக்கு வாழ்த்துக்கள் தந்தமைக்கு நன்றி மலிக்கா..

அன்புடன் மலிக்கா said...

அனைத்து நெஞ்சங்களுக்கும் அன்பான நன்றிகள். மற்றும் தீப்பாவளி நல்வாழ்த்துக்கள்..

சாருஸ்ரீராஜ் said...

கலக்கலான திபாவளி மல்லி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.