அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, October 26, 2009

கலவைச்சோறு


தேவையானவைகள்

அரிசி 2 கப்
கொத்துக்கறி 1/4 கிலோ
தக்காளி 1
[பெரிய வெங்காயம்]பல்லாரி 1
கேரட்1
மத்தங்காய் 1கப்
பாலக் [கீரை] 1/2 கட்டு
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
காளிப்ளவர் 1 கப்
ப்ளாக் ஐ, பயர் [காராமணீயாம்] 1 கப்
பச்சைமிளகாய் 2
உப்பு
ஆயில்
கொ,மல்லி
பட்டை ஏலக்காய்,கிராம்பு பிரிஞ்சிலை,
தாளிக்க கடு கருவேப்பில்லை
[பொடிக்க]
கடலைப்பருப்பு கொஞ்சம்
காய்ந்தமிளகாய் 2
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
இவைகளை வெரும் வானலியில் வறுத்து நைசாக அல்லாமல் பொடித்துக்கொள்ளவும்]

அரிசியையும், பயரையும், நன்றாக அலசிவிட்டு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
கீரை காய்களை நறிக்கிக்கொள்ளவும், கொத்துக்கறியை தண்ணீர்விட்டிஅலசி வடிகட்டியில் வடிக்கத்துக்கொள்ளவும்


ஒரு அகலமான சட்டியை அடுப்பில்வைத்து அது காய்ந்ததும் தேவையான அளவு ஆயிலூற்றி அதுசூடானதும் பட்டை பிரிஞ்சி இலை ஏழ்க்காய் கிராம்பு அனைத்தும்போட்டு வாசனைவந்ததும்


நறுக்கிய [வெங்காயம்]பல்லாரி தக்காளியை போடவும்


அது வதங்கியதும் மற்ற நறுக்கிவைத்துள்ளகாய்களை போடவும்அதுவும் வதங்கயதும் இஞ்சிபூண்டுவிழுதைபோட்டு கிளறிவிட்டு


அதன்மேல் ஊறவைத்த பயரையும் கொத்துக்கறியையும்போட்டு


தேவையான அளவு தண்ணீர்விட்டு



கொதித்து வந்ததும் ஊறவைத்திருக்கும் அரிசியைப்போடவும்


அது செட்டாகும்வரை தீயை மிதமாகவைத்து மூடிவைக்கவும்



பதத்துக்கு வந்ததும் திறந்து அதன்மேல் பொடித்துவைத்த பொடியை போட்டு நன்றாக கிளறிவிடவும்

அடிபிடித்துவிடாமல் கிளறிவிட்டு நன்றாக செட்டானதும் கருவேப்பில்லை கடுகுபோட்டு தாளித்து அதன்மேல் ஊற்றவும்


மீண்டுமொருமுறை கிளறிவிட்டு கொ,மல்லி பொடியாக நறிக்கி தூவவும்


இப்போது சூடான சுவையான நல்ல ஹெல்தியான உணவு தயார்,
இதற்கு உருலைக்கிழக்கை பொறித்து அதன்மேல் அலங்கறித்து பறிமாரவும்.
சைடிஸ் இல்லாமலே சாப்பிட சூப்பராக இருக்கும் வேண்டுமென்றால் தயி பச்சடி வைத்துக்கொள்ளலாம், இன்னும் கொஞ்சம் ரிச்சாக முட்டை வேகவைத்து பொறித்து சாப்பிடலாம்..

அன்புடன் மலிக்கா


10 comments:

நாஸியா said...

அடடே.. ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்க. இதுவும் உங்க ஊரு ஸ்பெஷல் ஆ? பல்லாரி என்றால் வெங்காயமா? இது எந்த ஊருல அப்படி சொல்லுவாங்க?

ஹேமா said...

பல்லாரி என்றால் என்ன மல்லிக்கா.
எனக்குப் புதுச்சொல்லா இருக்கு.
வெங்காயமோன்னு யோசிக்கிறேன்.

புரியாணி மாதிரி இருக்கு.ஆனா பயறு,வெந்தயம் வேற சுவையையும் வாசத்தையும் தரும் என்று நினைக்கிறேன்.நிச்சயம் செய்து பார்ப்பேன்.

அன்புடன் மலிக்கா said...

/நாஸியா said...
அடடே.. ரொம்ப சூப்பரா இருக்கு பார்க்க. இதுவும் உங்க ஊரு ஸ்பெஷல் ஆ? பல்லாரி என்றால் வெங்காயமா? இது எந்த ஊருல அப்படி சொல்லுவாங்க?/

இது எங்க ஊர் ஸ்பெசல் இல்லை நாஸியா, பெங்களூர் தோழி இதேபோல் செய்வார்கள், அதைபார்த்து நம்மோட ஸ்டைலையும் கலந்த கலவைங்கோ இது, பல்லாரின்னு [பெரிய வெங்காயத்திற்கு] சொல்லுவோம். உங்கபக்கம் எப்படி சொல்லுவீங்க?

அன்புடன் மலிக்கா said...

ஹேமா said...
பல்லாரி என்றால் என்ன மல்லிக்கா.
எனக்குப் புதுச்சொல்லா இருக்கு.
வெங்காயமோன்னு யோசிக்கிறேன்.

பெரிய வெங்காயத்தை பல்லாரின்னுதான் சொல்லுவோம் ஹேமா, எங்கபக்கம் மட்டுமில்லை நிறைய இடங்களில் இதுபோல் சொல்லக்கேள்வி.

/பிரியாணி மாதிரி இருக்கு.ஆனா பயறு,வெந்தயம் வேற சுவையையும் வாசத்தையும் தரும் என்று நினைக்கிறேன்.நிச்சயம் செய்து பார்ப்பேன்/

ஆமா ஹேமா இது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்பா, நல்ல ஹெல்த்தான உணவு, செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்கள்..

அனுபவம் said...

பார்த்ததுக்கே சாப்பிட்டமாதிரி இருக்கே! வீட்டுல இதெல்லாம் செய்வீங்களா மலிக்கா?

அன்புடன் மலிக்கா said...

வாங்க அனுபவம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

எல்லாமே வீட்டில்தன் செய்வோம், ஹோட்டலின் ஸ்பெசல் ரெசிபிக்களும் வீட்டில் செய்து பார்க்கிறதுதான் நல்லாயிருந்தாலும் இல்லாட்டாலும் நம்மதானேன்னு டிரைப்பண்ணிட்றது,[அச்சோ பாவமுன்னு நினைப்பதுபோல் தெரியுது].. மீண்டும் மீண்டும் வருக

சாருஸ்ரீராஜ் said...

எங்க ஊர்லையும் பெரிய வெங்காயத்தை பல்லாரின்னு சொல்லுவாங்க , இதுல கொத்து கறி போடாம செய்யலாமா மலிக்கா. பார்க்கவே சூப்பரா இருக்கு,

பாவா ஷரீப் said...

கூட்டாஞ்சோறு இன்னு கூட சொல்லலாமா மலிக்கா

அன்புடன் மலிக்கா said...

/sarusriraj said...
எங்க ஊர்லையும் பெரிய வெங்காயத்தை பல்லாரின்னு சொல்லுவாங்க , இதுல கொத்து கறி போடாம செய்யலாமா மலிக்கா. பார்க்கவே சூப்பரா இருக்கு/

தாளரமாக செய்யலாம் சாருக்கா போட்டால் நான்வெஜ் போடவிட்டால் வெஜ், பசங்களுக்கு மிக சத்தானௌணவு இதன்கூட பாதம் முந்திரின்னும் பொடித்துபோடலாம் சாருக்கா, செய்துபாருங்க..

அன்புடன் மலிக்கா said...

/கருவாச்சி said...
கூட்டாஞ்சோறு இன்னு கூட சொல்லலாமா மலிக்கா/

இது நான்மட்டும் இருந்து செய்தது கருவாச்சி அதெப்படி கூட்டாகமுடியும். [ஹ ஹ ஹ] எப்படி..
கூட்டான்ஞ்சோறுன்னும் சொல்லிக்கொள்ளலாமுங்க...

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.