அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, October 17, 2009

பாலக் புலாவ்




தேவையானவை




1 கட்டு பாலக்[கீரை]
2 கப் பாஸ்மதி அரிசி
2 பல்லாரி பெரியது
2 பச்சை மிளகாய்
1தக்காளி
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 பிரிஞ்சி இலை
2 பட்டை ஏலக்கய்
இஞ்சிபூண்டு விழுது 1 டேபில்ஸ்பூன்
4 டேபில் ஸ்பூன் பசு நெய்  “கீ” சேர்க்காதவர்கள் ஆயில் உபயோகப்படுத்தலாம்,
உப்பு தேவைக்கேற்ப.


முதலில் கீரை பல்லாரி தக்காளி இவைகள் நறுக்கிக்கொள்ளவும் ப.மிளகாயை நீளவாக்கில் கட் செய்யவும்



ஓவன் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் ஆயில்விட்டு நருக்கிய பல்லரி தக்காளி ப.மிளகாய் இவைகலில் பாதியை போட்டு 1 நிமிடம் மூடாமல் ஓவனில்வைக்கவும்,

பின்பு ஓப்பன்செய்து கீரை உப்பு கரம்மசாலாசேர்த்து கிளரிவிடவும்

மறுபடியும் மூடி 2 நிமிடம் வைக்கவும்


ரைஸ்குக்கரில் 3. ஸ்பூன் கீயைபோட்டு சூடானதும் பட்டை ஏலம் பிரிஞ்சி இலைபோடவும். அதுவாசனை வந்ததும்


மீதமுள்ள தக்காளி பல்லாரி ப.மிளகாய் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கவும் பச்சைவாசம்போனதும்


கப்புக்கு 1 .12 என்ற அளவு தண்ணீர்சேர்க்கவும் மூடிவைத்து ஒருகொதிவந்ததும்அரிசியைப்போடவும்

[10 நிமிடம் குளிர்ந்தநீரில் ஊரவைத்து போட்டால் சாப்டாகவும் நீளமாகவும் வரும்]முக்கால் பதத்துக்கு வந்ததும்


கீரைக்கலவையை அதனுடன் சேர்த்து மெதுவாககிளறிவிடவும்

குக்கரை மூடி வார்மில் 5 நிமிடம் வைத்துவிடவும்
ஓவனில் சிரிய பெளவுல் வைத்து முந்திரியும் கொஞ்சம் பல்லாரியும் பொன்முருவலாக வருத்து புலாவின்மேல் அலங்கரிக்கவும்

இதற்கு சைட் டிஸ் மட்டன் குழப்பு சிக்ககன் கிரேவி, ஸோசேஜ் கிரேவி சூப்பரக இருக்கும்

கீரைகள் பிடிகாத குழந்தைகள்கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஹெல்த்துக்கும் நல்லது

அன்புடன் மலிக்கா







16 comments:

Anonymous said...

வாவ்.. சூப்பரா இருக்கு.. அடுத்த தடவை பிரியாணி சொல்லி தாங்களேன்.. ரைஸ் குக்கர் ல செய்ற மாதிரி..

நான் இனிம தான் இன்ஷா அல்லா தனியா சமையல் செய்யணும்..

அன்புடன் மலிக்கா said...

நிச்சியமாக சொல்லித்தருகிறேன் நாஸியா,

என்ன இனிமேதான் தனியா சமைக்கனுமா அப்படின்னா, இனிதான் தனியா வரப்போறீங்களா, அதாவது தனிக்குடித்தனம் [ஹ ஹ ஹ]

கருத்துக்களுக்கு மிக்க நன்றி

பீர் | Peer said...

பிரிஞ்சி இலைன்னா என்னாது?


@ நாஸியா, பிரியாணின்னு பேர் வச்சுக்கிட்டு, பிரியாணி சொல்லித்தர சொல்றது ரொம்ப ஓவரு.. ;)

பீர் | Peer said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. ஒரு கமண்ட் போடுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு...

கமெண்ட் விண்டோ ஸ்டைல்ல மாத்துங்க மேடம்..

Anonymous said...

பீர் | Peer Says:

@ நாஸியா, பிரியாணின்னு பேர் வச்சுக்கிட்டு, பிரியாணி சொல்லித்தர சொல்றது ரொம்ப ஓவரு.. ;)

ஹா ஹா. என்ன பண்றது அது விதி!

அன்புடன் மலிக்கா said...

பிரிஞ்சி இலைன்னா அது ஒருவகை மணம்தரக்கூடிய இலை அது காய்ந்தஇலைபோல் இருக்கும்,

இங்கு[துபையில்]இருக்கு,

தக்காளி வெங்காயத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிலேட்டில் இருக்கு பாருங்க அதுதான்,

அதுபோட்டால் பிரியாணி, நெய்சோறு, புலாவ், எல்லாம் ஒரு வித்தியாசமான டேஸ்டும் மணமும் இருக்கும்,

நீங்க எங்கே இருக்கீங்க பீர்..

அன்புடன் மலிக்கா said...

இபோது சரியாக வருதா கமெண்ட் என பார்த்துச்சொல்லுங்க பீர்

பீர் | Peer said...

ஓ.. அந்த காய்ந்த இலையைத்தான் பிரிஞ்சு இலைன்னு சொல்றீங்களா? ம்.. நானும் யூஸ் பண்ணியிருக்கேன், ஆனா பேர் தெரியாது. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி ;)

நான் குவைத்தில் இருக்கேன் மலிக்கா அக்கா. (என் அக்கா பெயரும் மலிக்கா தான்)

பீர் | Peer said...

//நாஸியா said...
... ஹா ஹா. என்ன பண்றது அது விதி!//

நாஸியா, உங்க கையால பிரியாணி சாப்பிடறவங்களும் இதே பதிலை சொல்ல மாட்டாங்களே...? ;)

பீர் | Peer said...

ம்.. இப்போ கமெண்ட் பிரச்சனை இல்லை. சூப்பர்...

Jaleela Kamal said...

வாவ் சூப்பரான பாலக் புலவு இங்கு வரை மணக்குதே?

வாழ்த்துக்கள்.

புது டெம்லேட்டில் கலக்குறீங்க மலிக்கா.

அன்புடன் மலிக்கா said...

எல்லாம் சமையல் ராணிக்கிட்ட கத்துகிட்டதுதான். நன்றி ஜலீலாக்கா

சாருஸ்ரீராஜ் said...

பாலக் புலாவ் சூப்பர்

அன்புடன் மலிக்கா said...

/பீர் | Peer said...
/ம்.. இப்போ கமெண்ட் பிரச்சனை இல்லை. சூப்பர்/

நன்றி பீர், அதுசரி உங்க அக்கா பெயரும் மலிக்காவா கேட்கவே சந்தோஷமாக இருக்கு,

என்மச்சிமகன் பெயரும்
பீர் முகம்மதுதான்..

அன்புடன் மலிக்கா said...

/sarusriraj said...
பாலக் புலாவ் சூப்பர்/

நன்றி சாருக்கா..

sakthi said...

எனக்கு பசியோ பசி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.