அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, May 8, 2010

வானவில் வட்லப்பம்..

என்னது வானவில்லில் வட்லப்பமா? அப்படினெல்லாம் கேக்கக்கூடாது.
ரயின்போ ந்னா வானவில்தானே  அதான்
[அப்பாடா எப்படியெல்லாம் சொல்லி இவுங்ககிட்டேர்ந்து தப்பிக்கிறது ஸ்ஸ்ஸ்ஸ்] 
தேவையானவை
ரையின்போ மில்க் 1சிறிய டின்
முட்டை 6
ஜீனி 150 கிராம்
பசுநெய் 6 ஸ்பூன்
தேங்கா துருவல் 1 கப்
முந்திரி அல்லது பாதாம் 10
உப்பு சிறி சிறிதளவு

மிக்ஸியில் முட்டை ஜீனி. ரையின்போ மில்க் அனைத்தும் பெரிய ஜாரில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
சிறிய ஜாரில் தேங்காய் துருவல் முந்திரி இரண்டையும் நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இரண்டு அரவைகளையும் ஒன்றாய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டும் கலப்பதுபோல் நன்றாக கலக்கிவிட்டு அதன்மேல் பசுநெயை ஊற்றவும்.
அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரம் அல்லது இட்லி சட்டியில் தண்ணீர்வைத்து சற்று ஆவி [அச்சோ அந்த ஆவியல்ல] வந்ததும் கலந்து வைத்தபாத்திரத்தை அதனுள் இட்டு மூடவும்.
மிதமான தனப்பில் அடுப்பை வைக்கவும்.

15 நிமிசத்தில் வானவில் வட்லப்பம் ரெடி
//சுஸ்கி//இது தேங்காய்பாலிதான் செய்வார்கள் நான் கொஞ்சம் விச்சியாச
முயற்சி செய்துபார்த்தேன். இதில் பாதம் முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலையும் சேர்க்கலாம்.
தேங்காய்பால் கொலஸ்ட்ரால். அதனால் இதுப்போன்றும். மற்றும் கொழுப்பு நீக்கிய பாலிலும் செய்துபார்கலாம்.
அப்படியே சாப்பிடுங்க. இது ஜால்ரா இங்கு கிளிக் செய்தால் வரும் ஜால்ரா[அதான் ஜாலர்ன்னு சொல்வாங்க] அது ரொம்ப மேட்சாயிருக்கும் சேர்த்து சாப்பிட. இடியாப்பத்துக்கும் பாயாக்கூட இதுவும் சூப்பர்...

//இதுதான் ரையின்போ மில்க்//


அனைத்து அன்னையர்களுக்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள் ..

அன்புடன் மலிக்கா

23 comments:

Jaleela Kamal said...

அட இங்கு ரெயின் போ வட்லாப்பாமா?

அங்க வாங்க அங்கும் வட்லாப்பம் தே..

சாந்தி மாரியப்பன் said...

ரெயின்போ மில்க்ன்னா என்னங்க. பசும்பாலா, இல்லைன்னா மில்க்மெய்டா. ஒரு போட்டோ போட்டிருக்கலாம்.

நாடோடி said...

ரெம்ப‌ வித்தியாச‌மாதான் இருக்கு... பெய‌ர் எல்லாம் ந‌ல்லா தான் வைக்குறீங்க‌.

ஜெய்லானி said...

ஹா..என் ஃபேவரிட்.

பிறகு வரேன்.

நாஸியா said...

யக்கோவ்.. எனக்கு ஒரு துண்டு அனுப்பி உடுங்க!

Asiya Omar said...

மலிக்கா நலமா?வட்லப்பம் சூப்பராக அதைவிட பரிமாறிய தட்டே ரெயின்போ மாதிரி தான் இருக்கு.

Menaga Sathia said...

சூப்பராயிருக்கு மலிக்கா!!

காஞ்சி முரளி said...

ஏங்க... உங்களுக்கே நியாயமா..? அநியாயமா படல..!

நானே..
என்னில் பாதியும்... என்னின் மீதியும்
சொந்த ஊருக்கு போயிட்டாங்க...ன்னு feel பண்ணிட்டு... hotelல்ல சாப்ட்டுட்டு இருக்கேன்..

இந்த நேரத்தில் இந்த இடுகையெல்லாம் போட்டா...

உங்களுக்கே நியாயமாபடுதா...?

photos எல்லாம் நல்லா இருக்கு...!

நட்புடன்...
காஞ்சி முரளி...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா. பார்கவே சாப்பிடனும் போல இருக்கே..
ரெண்டு பார்சல் பண்றது.. :)
நானும் செஞ்சு பார்க்கறேன்..
அன்னையர் தின வாழ்த்துக்கள்..

வைகறை நிலா said...

அற்புதமான படைப்பு..
இணைத்துள்ள புகைப்படங்களும் அருமை..
செய்துபார்க்க தூண்டுகிறது..
புத்தகமாக உங்கள் படைப்புகளைப் போட்டால்
உங்கள் வலைப்பதிவில் தெரியப்படுத்துங்கள்.

மனோ சாமிநாதன் said...

புகைப்படத்தைப்பார்த்தால் சுவையும் அதிகமாக இருக்கும்போலத்தான் தெரிகிறது! செய்முறையும் ரயின்போ பாலில் என்று வித்தியாசமாக இருக்கிறது! செய்து பார்க்க வேண்டும்!

ஜெய்லானி said...

அமுல் ஸ்பிரே கிடைக்காட்டி என்ன அதான்ரெண்டு ரெயின்போ டப்பா போட்டுட்டீங்களே . தங்கமான மனசு உங்களுக்கு ஹி...ஹி..

ஜெய்லானி said...

@@@நாஸியா--//யக்கோவ்.. எனக்கு ஒரு துண்டு அனுப்பி உடுங்க!//

இங்கேயும் அதே பதில் வரும் போது பார்ஸல் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஹுஸைனம்மா said...

ரெயின்போ மில்க்ல செஞ்சா, அது வானவில் வட்லாப்பமா? அப்ப, இதே பால்ல டீ போட்டா ரெயின்போ டீயா? நக்கல் மலிக்கான்னுதான் பேர் வக்கணும் உங்களுக்கு. :-)))))

நானும் ஏழுநிறத்துல இருக்குமாக்கும்னு ஆசையா ஓடிவந்தேன் பாருங்க, என்னச் சொல்லணும்!! ;-)))

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
அட இங்கு ரெயின் போ வட்லாப்பாமா?

அங்க வாங்க அங்கும் வட்லாப்பம் தே..

ஆகா அக்காவும் தங்கையும் ஒன்னாதான் செய்திருக்கோம் என்னஒரு ஒற்றுமை கண்ணுப்படபோகுதம்மா கறுத்த கருப்பச்சி.. ஹி ஹி


/அமைதிச்சாரல் said...
ரெயின்போ மில்க்ன்னா என்னங்க. பசும்பாலா, இல்லைன்னா மில்க்மெய்டா. ஒரு போட்டோ போட்டிருக்கலாம்..//

உங்களூக்காக போட்டுட்டேன் அமைதிச்சாரல்..

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
ரெம்ப‌ வித்தியாச‌மாதான் இருக்கு... பெய‌ர் எல்லாம் ந‌ல்லா தான் வைக்குறீங்க‌.//

நாமளும் எப்போ பேமஸாகிறது
ஹி ஹி நன்றி ஸ்டீபன்..




/ஜெய்லானி said...
ஹா..என் ஃபேவரிட்.

பிறகு வரேன்./

ஓகோ அப்புடியா முன்னமே தெரிந்திருந்தா அண்ணாத்தேக்கு பார்சலில் ஒரு பீஸ் அனுபியிருக்கலாமே. ச்சே மிஸ்பண்ணியாச்சி..

அன்புடன் மலிக்கா said...

நாஸியா said...
யக்கோவ்.. எனக்கு ஒரு துண்டு அனுப்பி உடுங்க!

என்னாதிது ஒரு துண்டா அதெல்லாம் இங்கே லேதுமா!

ஒரு பீஸுன்னாலும் சரி அதென்ன துண்டு டவலுன்னுகிட்டு

[அடியே மல்லி பிரியாணிவேற வெறும் சட்டியில் ஒன்னுமில்லாம கரண்டிபோட்டு கிண்டிகின்னு கீது
நீ வாயாட்டினா அவ்வளதுதான் பிரியாணீக்கு பதிலா மல்லிதான் சட்டியில ஆத்தாடி]


//asiya omar said...
மலிக்கா நலமா?வட்லப்பம் சூப்பராக அதைவிட பரிமாறிய தட்டே ரெயின்போ மாதிரி தான் இருக்கு//

ஆசியக்கா. என்னமோ தெரியலக்கா 10 நாள் படு சோக்காபோட்டு வாட்டிடுத்து
சுரம்.

ஏதோ எழுந்துட்டேன். அதான் விருந்து வைக்கலாமுன்னு இதச்செய்தேன் அப்படியே இப்பாலையும் காட்டினேன்.

ரொம்ப தேங்ஸ்க்கா

அன்புடன் மலிக்கா said...

Mrs.Menagasathia said...
சூப்பராயிருக்கு மலிக்கா!!

மிக்கநன்றி மேனகா..


//காஞ்சி முரளி said...
ஏங்க... உங்களுக்கே நியாயமா..? அநியாயமா படல..!//

ஆகா அநியாயமா பட்டுடிச்சா எலே மல்லி நீயே துண்ணா
அப்படித்தான் படும். கேக்குதாகல்ல சொல்லு..

//நானே..
என்னில் பாதியும்... என்னின் மீதியும்
சொந்த ஊருக்கு போயிட்டாங்க...ன்னு feel பண்ணிட்டு... hotelல்ல சாப்ட்டுட்டு இருக்கேன்..

இந்த நேரத்தில் இந்த இடுகையெல்லாம் போட்டா...//

கவலை உடுங்க அண்ணாத்தே. பார்சல் அனுப்பட்டா. இல்லையின்னா
உங்க பாதிவந்ததும். அல்லாத்தையும் சேத்து பண்ணச்சொல்லலாம் ஓகே

//உங்களுக்கே நியாயமாபடுதா...?//

படலதான் என்னச்செய்ய இருந்ததை போட்டுடன்

//photos எல்லாம் நல்லா இருக்கு...!//

போட்டோகிராபி மல்லி வாழ்க சொல்லிகிட்டேனே

//நட்புடன்...
காஞ்சி முரளி...//

மிக்க நன்றி முரளி..

ஸாதிகா said...

வட்டலப்பம்.நடுவிலே ஒரு பொண்ணு..நல்லாத்தேன்ன்ன்ன் இருக்கு மலிக்கா

sabeeca said...

சலாம் ராத்தா. வட்லாப்பத்துக்கு சேத்திருக்கும் பால். கண்டென்ஸ்டு பால் தானே. இல்லே கார்னேஸன் பாலா.ஃபோட்டவுல எனக்கு கிளியறா தெரியல.

'பரிவை' சே.குமார் said...

பேரே நல்லாயிருலக்கு..!

அடுத்த வாரம் ஊருக்கு போறேன்... செஞ்சு பார்த்துட்டாப் போச்சு.

jaseela said...

வட்டலாப்பம்........சொன்னாலே நாவில் எச்சில்தான்....இது வித்யாசமா இருக்கே....செய்து பார்கிறேன் சகோதரி....:)

jaseela said...

வட்டலாப்பம்........சொன்னாலே நாவில் எச்சில்தான்....இது வித்யாசமா இருக்கே....செய்து பார்கிறேன் சகோதரி....:)

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.